சமுதாய நல கூடத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா

சமுதாய நல கூடத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா
X
சமுதாய நலக்கூடத்திற்கு சுமார் 45 லட்ச ரூபாய் செலவில் நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி அடிக்கல் நாட்டினார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட 1 வது வார்டு பகுதியான காவேரி நகர் பகுதியில் கடந்த 2010 ம் ஆண்டு இந்திரா குடியிருப்பு திட்டத்தின் கீழ் 100 வீடுகள் மத்திய அரசு மற்றும் மாநில அரசு இணைந்து பயனளிகளுக்கு கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்த குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் நீண்ட நாட்களாக தங்கள் பகுதிக்கு சமுதாய கூடம் தேவை என கோரிக்கை வைத்திருந்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் சுமார் 45 லட்சம் ரூபாய் செலவில் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று சமுதாயகூடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், முன்னாள் அமைச்சர்ருமான தங்கமணி அடிக்கல் நாட்டி பேசுகையில், இந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சமுதாயக்கூடம் கடந்த மூன்று வருடங்களாக சட்டமன்ற கூட்டத்தொடரில் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுமான பணி மூன்று மாதத்திற்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Next Story