பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான பிரச்சார நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திருச்செங்கோடு நகராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான பிரச்சார நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினத்தையொட்டி, ”புதிய உணர்வு – மாற்றத்திற்கான முன் முயற்சி – 4.0” துவக்க நாளாக கொண்டு, பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான பிரச்சார நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.தேசிய அளவிலான வாழ்வாதார இயக்கத்தின் மூலம் பாலினம் தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு இன்று முதல் (25.11.2025) நாடு முழுவதும் ஒரு மாத காலத்திற்கு (23.12.2025 வரை) மாநிலம் / மாவட்டம் / வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி அளவில் பாலின பாகுபாட்டிற்கு எதிரான பிரச்சாரம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தாண்டு பிரச்சாரத்தின் முக்கிய கருபொருளாக பெண்கள் வழி நடத்தும் வளர்ச்சி – வன்முறையற்ற சமூகத்திற்கான பாதை (Women – led Development Pathway to Violence – Free Society) என்ற கருத்துக்களை கொண்டு நான்கு வார காலத்திற்கு இவ்விழிப்புணர்வு பிரச்சாரத்தை சிறப்பாக நடத்தி முடிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தின விழிப்புணர்வு பேரணியினை தொடங்கி வைத்தார். இப்பேரணியானது பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செங்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் வரை நடைபெற்றது. இப்பேரணியில், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பெண்களின் பாதுகாப்பு என்பது அனைவரின் பொறுப்பாகும், பராமரிப்பு பணிகள், அங்கீகரித்தல், குறைத்தல் மற்றும் பகிர்தல் ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளம், சமவாய்ப்புகள் மற்றும் சேவைகளுக்கான அனுகல் என்பது வன்முறை தடுப்பின் முழு மூச்சு, பெண்கள் வழி நடத்தும் வளர்ச்சி தான் சமுத்துவமான சமூகத்திற்கான வழி உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றனர்.தொடர்ந்து, திருச்செங்கோடு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான பிரச்சார கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார். மேலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பாலின சமத்துவத்திற்கான விழிப்புணர்வு உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர், திருச்செங்கோடு நகரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.2.50 கோடி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.50.00 இலட்சம் என மொத்தம் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணியினை பூமிபூஜையிட்டு தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் பி.எஸ்.லெனின் உட்பட உதவி திட்ட அலுவலர்கள், துறைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Next Story