போலி லாட்டரி விற்ற வழக்கில் இருவர் கைது

X
Komarapalayam King 24x7 |25 Nov 2025 6:37 PM ISTகுமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்ற வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. நடராஜ் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். குமாரபாளையம் கத்தேரி பிரிவு, , பள்ளிபாளையம் பிரிவு ஆகிய பகுதியில் லாட்டரி விற்பது தெரியவந்தது. நேரில் சென்ற போலீசார், போலி லாட்டரி விற்ற அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளிகள் சம்பத், 42, இளங்கோவன், 59 ஆகிய இருவரை கைது செய்து, போலி லாட்டரி டிக்கெட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
Next Story
