காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளை சந்தித்து கருத்து கேட்கும் கூட்டம் திருச்செங்கோட்டில் நடந்தது மேலிட பார்வையாளர் பெல்லையாநாயக் கலந்து கொண்டார்

காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளை சந்தித்து கருத்து கேட்கும் கூட்டம் திருச்செங்கோட்டில் நடந்தது மேலிட பார்வையாளர் பெல்லையாநாயக் கலந்து கொண்டார்
X
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தல் படி இந்தியா முழுவதும் அமைப்பு  மறு சீரமைப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது அதன்படி நாமக்கல் மேற்கு மாவட்டகாங்கிரஸ் கட்சி சார்பில் ஆய்வுக்கூட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது
காங்கிரஸ் கட்சி வலுப்படுத்தவும் மக்களின் கட்சியாக மாற்றுவதற்காக இளம் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்தும் தெலுங்காவில்  இருந்தும் இரண்டு மாபெரும் பாதயாத்திரை மேற்கொண்டார் இதில் இந்திய அளவில் காங்கிரஸ் வலுப்பெற்றது.அப்பொழுது மக்களிடையே கட்சியை பலப்படுத்த பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன அந்த மனுக்களின் அடிப்படையில் இந்தியா முழுவதும் கட்சியின் உண்மையான விசுவாசிகள் நேரடியாக மாவட்டம் தோறும்  சென்று அங்கு தங்கி இருந்து மாவட்ட நகர வட்டார கிராம காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து அவரிடம் ஆர்வம் உள்ளவர்களிடம் மாவட்ட தலைவருக்கான விண்ணப்பம் பெற்று அது குறித்து ஆலோசனை செய்து பின்னர் விருப்ப  விண்ணப்பங்களை தலைமைக்கு  அனுப்புமாறு ராகுல் காந்தி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் இந்தியா முழுவதும் இது போல அமைப்பு மறு சீரமைப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று நாமக்கல்  மாவட்ட காங்கிரஸ் சார்பில் மேற்கு மாவட்ட தலைவர் சர்வேயர் செல்வகுமார் தலைமையில்திருச்செங்கோட்டில் நடைபெற்றது இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பார்வையாளராக அகில இந்திய ஆதிவாசி காங்கிரஸ் துணைத் தலைவரும் தெலுங்கானா மாநில பழங்குடி மக்கள் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் ஆன டாக்டர் பெள்ளையா நாயக் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளை சந்தித்தார் அதனை தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களை சந்தித்த பொழுது அப்போது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய பணி தற்போது நடைபெற்று வருகிறது அளவில் காங்கிரஸ் கமிட்டி உறுதி படுத்த பட்டு வருகிறது குறிப்பாக மகாராட்டிரம் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது இதில் மக்கள் தொடர்பு உள்ள கட்சியாக உருவாக்க திட்டமிட்டு உள்ளோம்  அடிமட்ட மக்களின் நிலையை உயர்த்தவும் பொறுப்புள்ள அதிக ஈடுபாடு உள்ள கட்சியாக மாவட்ட மாநிலம் தோறும் உருவாக்க திட்டமிட்டு உள்ளோம் இதனை தொடர்ந்து வட்டார அளவில் கமிட்டி ஆலோசனைக் குழு ஏற்படுத்தி மாவட்ட தலைவர்களை தேர்வு செய்து நவம்பர் 27க்குள் விண்ணப்பங்கள் தரவும்  மாநிலம் தோறும் 8 மாவட்டமாக குழுவாக பிரிக்கப்பட்டு   கூட்டம் நடத்தப்படும் . புதிய தலைவர்களை தேர்வு செய்யவும் போது பழைய தலைவர்களை இதை விட அதிக பொறுப்பில் அமர்த்த படுவார்கள் நாமக்கல் மாவட்டத்தில் மேற்கு மாவட்டத்திற்கு இன்று நாளை மறுதினம் ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் என்றும் வரும் 27ஆம் தேதிக்கு ர மனுக்கள் பெறப்பட்டு அதனை விசாரணை மேற்கொண்டதன்பின் 28ஆம் தேதி காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார் பல்வேறு தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு வெற்றி தோல்வி அடைந்துள்ளோம் கட்சியில் பல அணிகள் இருந்தாலும் அதனை நாங்கள் ஆரோக்கியமான பார்க்கிறோம் பீகார் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக கேள்விக்கு பதில் அளிக்கையில் 8 ஆண்டு காலமாக இது போன்ற இயக்கங்களை நடத்தி வருகிறோம் ஆனால் பீகார் தேர்தல் என்பது போன்ற தோரணை தமிழகத்தில் நடைபெறாது என தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில்   மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பரமசிவம் நடராஜன் காந்தி தனகோபால் கிருஷ்ணன் ஜெகநாதன் ஜோதீஸ்வரன் மாவட்ட துணைத் தலைவர்கள் காசி விசுவநாதன் நடராஜன் கிருஷ்ணன் தங்கராஜ் மாவட்ட பொது செயலாளர் நந்தகோபால் கோபால் கொல்லப்பட்டி கணேசன் செயலாளர்கள் சந்துரு கோகுல் நகர தலைவர்கள் ஜானகிராமன் ராஜேந்திரன் வட்டார தலைவர்கள் அரண்மனைத்தார் ராஜா தங்கவேல் குப்புசாமி பழனிச்சாமி எம்பி முத்துச்சாமி ரவிச்சந்திரன் பேரூராட்சி தலைவர்கள் ஹரி திலகர் ராஜா மணியன் மூத்த தலைவர் கையே அருணாச்சலம் சுவாமிநாதன் இளைஞர் அணி மாவட்ட தலைவர்கள் முரளி ஆதிசேஷன் எஸ் சி பிரிவு மாவட்ட தலைவர் சந்திரமோகன் சிறுபான்மை பிரிவு தலைவர் சிக்கந்தர் ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story