நவோதயா பள்ளி வீரர்கள் கொங்கு சகோதயா நடத்திய கால்பந்து போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை.

X
NAMAKKAL KING 24X7 B |25 Nov 2025 8:35 PM ISTநவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் கொங்கு சகோதயா கூட்டமைப்பு நடத்திய கால்பந்து போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.
கொங்கு சகோதயா என்ற கூட்டமைப்பு கொங்கு மண்டலத்தில் இயங்கி வரும் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தவும், தனித்திறன்கனை வளர்த்தெடுக்கவும் 2008ஆம் ஆண்டு தோன்றிய ஒரு மாபெரும் கூட்டமைப்பாகும். ஓவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவ, மாணவியருக்கும் அனைத்துவகையான விளையாட்டுப் போட்டிகளையும், அறிவுசார்ந் கலைப்போட்டிகளையும் நடத்தி பதக்கம், கோப்பை, மற்றும் சான்றிதழ் வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த கல்வியாண்டிற்கான கால்பந்து போட்டியை ஈரோடு வெள்ளாளர் சீனியர் செகண்டரி சிபிஎஸ்இ பள்ளி கடந்து 21.11.2025 வெள்ளிக்கிழமையன்று நடத்தியது. கொங்கு மண்டலமான ஈரோடு. சேலம், நாமக்கல், திருப்பூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல் என பல்வேறு மாவட்டகங்களில் இருபதிற்கும் மேற்பட்ட பள்ளிகளிகளில் இருந்து கலந்துகொண்டார்கள், அதில் நமது நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் இருந்து பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சரண்ராஜ், கபிலன், விமல்ராஜ், வியாஸ், பிலால் அகமத் ஆகியோர் கலந்துகொண்டு 19வயதிற்கு உட்பட்டோர் பிரிவின் கீழ் மிகச்சிறப்பாக விளையாடி மூன்றாம் இடம்பிடித்து சான்றிதழ், கோப்பையை பெற்றுள்ளனர், பள்ளியின் செயலாளர் தனபால் அவர்களும், பொருளாளர் தேனருவி அவர்களும், மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி, கோப்பையை பரிசளித்து வெகுவாக வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர்களுக்கும்,வாழ்த்துகளைத் தெரிவித்தனர் மேலும் பள்ளி முதல்வர் இருபால் ஆசிரியர் பெருமக்கள், சக மாணவ, மாணவியர்கள், அனைவரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும். தெரிவித்தனர்.
Next Story
