கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி மாற்று திறனாளி நியமன உறுப்பினர் பதவியேற்பு

கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி  மாற்று திறனாளி நியமன உறுப்பினர் பதவியேற்பு
X
பொன்மனராஜ், மாற்றுத்திறனாளிகளுக்கான நியமன உறுப்பினராக பொறுப்பேற்று கொண்டார்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி பகுதியில் கடந்த ஜூலை மாதத்தில் நியமன உறுப்பினர் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் பொன்மனராஜ் என்பவர் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவருக்கு கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) கிருஷ்ணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான நியமன உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்ட பொன்மனராஜ்,பதவியேற்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார். அவருக்கு,கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி தலைவர் சேதுமணி,துணைத்தலைவர் வளர்மதி,பேரூராட்சி கவுன்சிலர்கள் ராதிகா,பட்டாயி,சிவகாமி,தங்கம்மாள் சசிகுமார்,இளங்கோவன், நல்லேந்திரன்,லோகநாதன் வடிவேல்,மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர் பழனிவேல்,உள்ளிட்ட ஏராளமானோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்
Next Story