தென்காசி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்

X
Tenkasi King 24x7 |25 Nov 2025 9:07 PM ISTதென்காசி அருகே நேற்று நடந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தென்காசி எம்எல்ஏ ஆறுதல் கூறினார்
தென்காசி- கடையநல்லூர் சாலையில் உள்ள இடைகால் துரைச்சாமிபுரத்தில் நேற்று இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 8 பேர் பலியாகினர். இதில் படுகாயம் அடைந்த 57 பேர் தென்காசி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அவர்களை இன்று தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான எஸ்.பழனி நாடார் நேரில் சந்தித்து பழங்கள், பிரட்களை வழங்கி நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். உடன் தென்காசி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் உதயகிருஷ்ணன் மற்றும் நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்
Next Story
