வாசகர் வட்டம் சார்பில் தேசிய நூலக வார விழா

X
Komarapalayam King 24x7 |25 Nov 2025 9:28 PM ISTகுமாரபாளையம் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் தேசிய நூலக வார விழா நடைபெற்றது
குமாரபாளையம் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் 58 வது தேசிய நூலக வார விழா வாசகர் வட்டத் தலைவர் விடியல் பிரகாஷ் தலைமையில் நடந்தது. மனநல சிகிச்சையாளர் சண்முகசுந்தரம் வரவேற்றார். விழாவில் மாணவ மாணவிகள், சிறுகதை போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவிய போட்டியில் கலந்து கொண்டனர். அனைத்து மாணவி மாணவிகளுக்கும் விடியல் ஆரம்பம் சார்பாக பாராட்டு சான்றிதழ் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது. மாணவ மாணவிகள் எவ்வாறு எழுத வேண்டும் எவ்வாறு பேச வேண்டும் என்பது குறித்து எழுத்தாளர் கேசவமூர்த்தி ராஜகோபால், பன்னீர்செல்வம்,யோக பயிற்சியாளர் லெனின், பேச்சாளர்கள் ஆனந்தன், சண்முகம், விவேக்,ஆகியோர் விளக்கமளித்தனர். கிளை நூலகர் மாரியாயி நன்றி கூறினார். இதில் கதிரவன், தீனா,ஜமுனா உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story
