தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி வலுவாக உள்ளது. இ.பி.எஸ்.,தான் முதல்வர்! பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி

X
Namakkal King 24x7 |25 Nov 2025 9:49 PM ISTஎஸ்ஐஆர்-ஐ தி.மு.க., எதற்காக எதிர்க்கின்றது என்றால், கள்ள ஓட்டு போடமுடியாது என்பதால் தான். இந்திய தேர்தல் கமிஷனை குறை சொல்லாமல், தங்களது கட்சியின் குறைகளை தி.மு.க., முதல்வர் கண்டுபிடிக்க வேண்டும். எஸ்.ஐ.ஆருக்கு எதிராக யார் ஆர்ப்பாட்டம் செய்தாலும் தவறு.
தமிழக பாஜக துணைத்தலைவரும், ராசிபுரம் சட்டசபை தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான வி.பி.துரைசாமி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாமக்கல் வந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது...இந்திய தேர்தல் கமிஷன், வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்வதற்காக எஸ்ஐஆர் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பாஜக மற்றும் அதன் தோழமை கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இது இந்தியாவில் 14 மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.மேலும், வருகிற சட்டசபை தேர்தலுக்கு பின்னர் இதை வைத்துக்கொள்ளலாம் என முதல்வர் கூறி வருகிறார். எஸ்.ஐ.ஆ.,ரால் எந்த வகையில் பாதிப்பு என சுப்ரீம் கோர்ட் கேட்டபோது, முதல்வரிடம் அதற்கு சரியான பதில் இல்லை. ராகுல்காந்தி, எஸ்.ஐ.ஆர்., குறித்து போலி பொய் குற்றச்சாட்டை தெரிவித்தார்.பீஹாரில் யாருமே இதுகுறித்து எந்த குற்றச்சாட்டும் தெரிவிக்க வில்லை. குறிப்பாக அங்கு எஸ்ஐஆர் திருத்தம் செய்யப்பட்ட பிறகு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிக அளவில் ஓட்டுப்பதிவு நடைபெற்றுள்ளது.அங்கு ஓட்டுப்பதிவில் எவ்விதமான முறைகேடும் இல்லாததால் ஓட்டுச்சாவடி கைப்பற்றுதல் மற்றும் மறு வாக்குப்பதிவு எந்த ஓட்டுச்சாவடியிலும் நடைபெறவில்லை. எஸ்ஐஆர்-ஐ தி.மு.க., எதற்காக எதிர்க்கின்றது என்றால், கள்ள ஓட்டு போடமுடியாது என்பதால் தான். இந்திய தேர்தல் கமிஷனை குறை சொல்லாமல், தங்களது கட்சியின் குறைகளை தி.மு.க., முதல்வர் கண்டுபிடிக்க வேண்டும். எஸ்.ஐ.ஆருக்கு எதிராக யார் ஆர்ப்பாட்டம் செய்தாலும் தவறு. எஸ்.ஐ.ஆரை., திமுக எதிர்ப்பதாக கூறி விட்டு அதற்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி வலுவாக உள்ளது. இ.பி.எஸ்.,தான் முதல்வர். த.வெ.க., எங்கள் கூட்டணிக்கு வருவது குறித்து தான் சொல்ல முடியாது. த.வெ.க., தனித்து நின்றால், தி.மு.க., வெற்றிபெறும் என்ற தி.மு.க., வின் கனவு பலிக்காது. வரும், ஜனவரிக்குள் பா.ஜ.க கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வரும்.ராசிபுரம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் எண்ணம் எனக்கு உள்ளது. ஆனால், கட்சி சொன்னால் தான் போட்டியிட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது ஓபிசி அணி மாநில துணை தலைவர் சத்யபானு, பாஜக கிழக்கு மாவட்ட துணை தலைவர் அருள், மத்திய அரசு நலத்திட்ட மாவட்ட அமைப்பாளர் சதிஷ், இணை அமைப்பாளர் கனகராஜ், ஓபிசி அணி மாவட்ட துணைத் தலைவர் கார்த்திகேயன், ராசிபுரம் ஒன்றிய செயலாளர் விஜய சரஸ்வதி ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story
