பழுதடைந்த ரோட்டை சீரமைக்க கோரிக்கை

X
Tenkasi King 24x7 |26 Nov 2025 8:53 AM ISTதிப்பனம்பட்டி நாட்டார்பட்டி ரோட்டை சீரமைக்க இயற்கை வள பாதுகாப்பு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் திப்பணம்பட்டி பஞ்சாயத்து உட்பட்ட திப்பனம்பட்டியில் இருந்து நாட்டார் பட்டி செல்லும் சாலைக்கு அருகே உள்ள சாலையானது மிகவும் மோசமாக மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். பள்ளமாக இருப்பதால் இந்த சாலையில் நிலை தடுமாறி விபத்துக்கள் ஏற்படுகிறது ஆதலால் சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக இந்த வழித்தடத்தை உயர்த்தி சாலையை சீரமைத்து தண்ணீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று இயற்கை வள பாதுகாப்பு அமைப்பின் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story
