சுரண்டை நகராட்சி சேர்மன் பொதுமக்களுக்கு அறிவிப்பு

X
Tenkasi King 24x7 |26 Nov 2025 9:11 AM ISTபலத்த மழை காரணமாக சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்
தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் சுரண்டை நகராட்சி பகுதி பொதுமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.... கடந்த இரண்டு நாட்களாக தென்காசி மாவட்டம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது.நாளை திங்கட்கிழமைக்கு ஆரஞ்சு அலார்ட் விடப்பட்டது.பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் குழந்தைகளை மின் கம்பம் மற்றும் நீர் நிலைகள் அருகில் செல்லாதவாறு கவனமாக பார்த்துக் கொள்ளவும். மின்சாதனங்களை பாதுகாப்பாக உபயோகப்படுத்தவும்,காச்சிய குடிநீரை பருகவும்.குடும்பத்தில் உள்ள அனைவரும் நிலவேம்பு கசாயம் அருந்தவும், அனுமன் நதிக்கரையில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும். என கேட்டுக்கொண்டுள்ளார்
Next Story
