ராமநாதபுரம் எஸ் ஐ ஆர் திருத்த பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு

ராமநாதபுரம் நகர் பகுதியில் எஸ்ஐஆர் திருத்த பணிகள் குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் அரசுத்துறை அதிகாரிகள் ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் எஸ்ஐஆர் திருத்த பணிகள் குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் அரசு துறை அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்தார். ராமநாதபுரம் நகர் பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை பணிகள் குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் காசி, நேர்முக உதவியாளர் பரமசிவம், வட்டாச்சியர் பழனிக்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை பணிகள் துல்லியமாகவும் குறிப்பிட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் படி நடைபெறுவது குறித்தும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை குறித்து பராமரிக்கப்படும் பதிவேடுகள் பெறப்பட்ட ஆவணங்கள் கணினி பதிவேற்றம் உள்ளிட்டவைகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர் உடன் இருந்தனர்.
Next Story