சுரண்டை பள்ளியில் விளையாட்டு விழா

Tenkasi King 24x7 |26 Nov 2025 11:01 AM ISTசுரண்டை ஜவஹர்லால் நடுநிலைப்பள்ளி மற்றும் ஜெமிமா மழலையர் பள்ளி விளையாட்டு விழா நடந்தது
தென்காசி மாவட்டம் சுரண்டை ஜவஹர்லால் நடுநிலைப்பள்ளி மற்றும் ஜெமிமா மழலையர் பள்ளியில் குழந்தைகள் தின விழா மற்றும் விளையாட்டு விழா பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் ஜேபஸ் பொன்னையா தலைமை வகித்தார் பள்ளி குழு நிர்வாகி செல்வராணி ஜேபஸ் மற்றும் சேங்கி பரஞ்சோதி மண்டேலா ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஜவஹர்லால் பள்ளி தலைமையாசிரியர் மெடி மோனிகா வரவேற்றார் சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர் தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன முடிவில் ஜெமிமா மழலையர் பள்ளி தலைமையாசிரியர் தங்கமாரி நன்றி கூறினார்
Next Story
