சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் அறிவியல் பூங்கா திறப்பு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் அறிவியல் பூங்கா திறப்பு
திருவள்ளூரில் புதிதாக கட்டப்பட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் அறிவியல் பூங்கா முதல்வர் படிப்பகத்தின் கல்வெட்டை சிறுபான்மை துறை அமைச்சர் நாசர் திறந்து வைத்து ஆர்எம்கே தனியார் கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்ட இ- ரயிலை ஒட்டி ரயிலில் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டுஅமைச்சர் நாசர் - பூங்காவை சுற்றி காட்டினர். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் சுமார் 5 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை பாதுகாப்பு மற்றும் அறிவியல் பூங்கா, மற்றும் முதல்வர் படிப்பகம், போன்றவைகளை அமைக்கப்பட்டது. அதனை தமிழ்நாடு துணை முதலமைச்சர் நேற்று திருவேற்காட்டில் நடந்த நிகழ்ச்சியில் திறந்து வைத்த நிலையில் அதன் கல்வெட்டை இன்று சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சாமு நாசர் பூங்காவை மாவட்ட ஆட்சியர் பிரதாப், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், ஆகியோர் உடன் இணைந்து ரிப்பன் வெட்டி கல்வெட்டை திறந்து வைத்ததுடன் பள்ளி மாணவர்கள், மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்து பார்வையிட்டார், மேலும் ஆர் எம் கே கல்வி குழும கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்ட இ- ரயிலில் பள்ளி மாணவர்களை அமர வைத்துக் கொண்டு புதியதாக திறக்கப்பட்ட பூங்காவை அமைச்சர் நாசர், தானே ஓட்டிச் சென்று சுற்றி காட்டி மகிழ்வித்தார், அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நாசர், தெரிவிக்கையில், குறுகிய காலத்தில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பள்ளி மாணவ மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் விதத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் அறிவியல் பூங்காவானது சுமார் ஐந்தரை கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு மாணவர்கள் படிப்பதற்கு முதல்வர் படிப்பகம் அதேபோன்று அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ளும் விதத்தில் அறிவியல் சார்ந்த பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், வைஃபை வசதி மாணவர்கள் குரூப் ஸ்டடி செய்யக்கூடிய சூழலை முதல்வர் படிப்பகம் பெற்றுள்ளதாகவும் இதே போன்ற தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார் மாணவர்கள் இத்தகைய பூங்காவிற்கு வந்து தங்களுடைய அறிவித்திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் வைத்தார் இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன் நகர் மன்ற தலைவர் உதய மலர் பொன் பாண்டியன், மற்றும் துறை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .
Next Story