கடையநல்லூர் பஸ்கள் விபத்தில் உயிரிழந்த பெண்ணின் பார்வையற்ற மகளுக்கு அரசு வேலை வழங்க முதலமைச்சர் உத்தரவு
Tenkasi King 24x7 |26 Nov 2025 3:12 PM ISTகடையநல்லூர் பஸ்கள் விபத்தில் உயிரிழந்த பெண்ணின் பார்வையற்ற மகளுக்கு அரசு வேலை வழங்க முதலமைச்சர் உத்தரவு
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே தனியார் பஸ்கள் மோதிய விபத்தில் உயிரிழந்த மல்லிகா என்பவரின் பார்வையற்ற மகள் கீர்த்திகாவிற்கு திமுக தென்காசி தெற்கு மாவட்ட மகளிர் அணி தலைவி பேபி ராஜப் பாத்திமா கண்ணீர் மல்க ஆறுதல் கூறினார் இந்நிலையில் கீர்த்திகாவுக்கு தொலைபேசியில் ஆறுதல் கூறிய முதலமைச்சர் முக ஸ்டாலின் அவருக்கு புளியங்குடி நகராட்சி அலுவலகத்தில் DATA ENTRY பணிக்கான ஆணையை வழங்க உத்தரவிட்டார் அதன் பேரில் தென்காசி ஆட்சியர் வழங்கவுள்ளார் என கூறப்படுகிறது தந்தையை ஏற்கெனவே இழந்த கீர்த்திகா, பேருந்து விபத்தில் தாயை பறிகொடுத்து பரிதவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story

