வாகன நிறுத்துமிடமாக மாறிய மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம்.

Tiruchirappalli (East) King 24x7 |26 Nov 2025 3:13 PM ISTவாகன நிறுத்துமிடமாக மாறிய மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இவ்வலுவலக வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை மருத்துவமனை, உதவிசெயற்பொறியாளர் அலுவலகம், இசேவை மையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் அலுவலக வளாகம் எப்போதும் மக்கள் நிறைந்து காணப்படும் சூழ்நிலையில் அலுவலக வளாகம் முழுவதும் அருகில் உள்ள கடை வியாபாரிகள், வெளியூர் செல்வோர் என பல்வேறு தரப்பினரும் தங்களது கார் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டுச் செல்வதால் கார் பார்க்கிங் போல் அரசு அலுவலக வளாகம் காட்சியளிக்கிறது. இதனால் அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். கார் பார்க்கிங்காக மாறிய அரசு அலுவலக வளாகத்தை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
