சிவன்மலையில் நடைபயிற்சி சென்றவர் மீது கார் மோதி பலி சிசி டிவி காட்சிகள் வைரல்

X
Kangeyam King 24x7 |26 Nov 2025 4:44 PM ISTசிவன்மலை கிரிவலப்பாதையில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள் மீது கார் மோதி 1 ஒருவர் பலி - ஒருவர் படுகாயம்.சிசிடிவி காட்சிகள் வைரல்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை கிரிவலப்பாதையில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள் மீது கார் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் 1 வர் பலியான நிலையில் மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் வைரல் ஆன நிலையில் காங்கேயம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காங்கேயம் அடுத்துள்ள பிரசித்தி பெற்ற சிவன்மலை திருக்கோவில் ஆகும்.இந்த மலையை சுற்றி சுமார் 4 கிலோமீட்டர் தூரம் கிரிவலப்பதை உள்ளது. இந்த பாதையில் அமாவாசை,பௌர்ணமி,சஷ்டி,கிருத்திகை,பிரோதோஷம், கந்தசஷ்டி ஆகிய தினங்களில் ஏரளாமானோர் கிரிவலம் வருவது வழக்கம். மேலும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் இந்த பாதையை "ஹெல்த் வாக்" என அறிவித்து கடந்த 2 ஆண்டுகளாக இந்த பாதையில் காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளை 100க்கும் மேற்பட்டோர் சமீபகாலமாக இங்கு நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதில் இன்று கணேஸ்வரன் (55), சுப்பிரமணி (55),பாலசுப்பிரமணி (53) ஆகியோர் சென்றுள்ளனர். இந்நிலையில் இவர்கள் மூன்று பெரும் நடைபயிச்சி மேற்கொண்ட நிலையில் இவர்களின் பின்புறம் வந்த கார் அதிவேகத்தில் இவர்கள் மீது மோதுகின்றது அதில் கணேஸ்வரன் மற்றும் சுப்பிரமணி ஆகியோர்களுக்கு பலத்த காயமடைந்தனர். இதை அடுத்து அப்பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் கணேஸ்வரன் வரும்வழியிலேயே இறந்துவிட்டதாகவும் சுப்பிரமணி படுகாயமடைந்துள்ளதாக கோவை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் அதிக வேகத்தில் சென்றுள்ளது. மேலும் விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. மேலும் விபத்து எதிர்ச்சியாக நடைபெற்றதா? அல்லது திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் கார் சென்றதா? என பல்வேறு கோணத்தில் காங்கேயம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
