ஊதியூர் அருகே சோலார் மின்சாரம் கம்பம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

X
Kangeyam King 24x7 |26 Nov 2025 4:49 PM ISTகாங்கேயம் ஊதியூர் அருகே சோலார் மின்சாரம் கொண்டு செல்ல கிராம மக்கள் எதிர்ப்பு. மின்சார கம்பம் அமைக்கும் பணி தடுத்து நிறுத்தும்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள ஊதியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான நல்லிமடம். இந்த பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் அருகே ஏ.ஜி.எஸ் என்ற தனியார் சோலார் நிறுவனம் சங்கரண்டாம்பாளையம் அருகே சோலார் நிலையம் அமைத்து அங்கிருந்து பெறப்படும் மின்சாரத்தை சாலை ஓரம் வழியாக மின்பாதை அமைத்து மின்சாரத்தை நொச்சிப்பாளையம் அருகே உள்ள ராசி பாளையம் துணை மின் நிலையத்திற்கு கொண்டு செல்கின்றனர். தனியார் சோலார் நிறுவனத்தினர் மின்சாரத்தை ராசி பாளையம் துணை மின் நிலையத்திற்கு கொண்டு செல்லும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்தது. இந்த நிலையில் நல்லிமடம் பகுதியில் சாலை ஓரங்களில் கிராம ஊராட்சி சார்பில் நடப்பட்டிருந்த மரக்கன்றுகளை வெட்டிவிட்டு சாலை ஓரங்களிலும் சுடுகாடு அருகேவும் மின்கம்பம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் சோலார் நிறுவனத்தினர் அமைக்கும் மின்பாதையை தடுத்து நிறுத்தி மின் கம்பம் அமைக்க வேண்டாம் என வலியுறுத்தி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் மின்பாதை அமைக்க மாவட்ட ஆட்சியர் சில வரைமுறைகளை படிதான் அமைக்கவேண்டும் என தெரிவித்திருந்தும் அதையெல்லாம் நிறுவனமும் மதிக்கவில்லை அதிகாரிகளும் அவற்றை ஆய்வு செய்யவில்லை என்கின்றனர். இச்சம்பவத்தை அறிந்த வடுகபாளையம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சங்கரண்டாம்பாளையம் ஊராட்சி செயலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சம்பந்தப்பட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் குண்டடம் வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் மற்றும் சோலார் நிறுவன மின்பாதை அமைப்பவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் வட்டார வளர்ச்சி அலுவலர் இல்லாததால் தற்காலிகமாக வட்டார வளர்ச்சி அலுவலர் வரும் வரை மின்பாதை அமைக்கும் பணிகளை நிறுத்தி வைப்பதாக கூறியதன் அடிப்படையில் தனியார் மின்பாதை அமைக்கும் நிறுவனத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மின் பாதை அமைக்கும் பணிக்கு எதிர்த்து தெரிவித்து சரியான முடிவு வட்டாட்சியர் அல்லது கோட்டாட்சியர் தெரிவித்தால் மட்டுமே இங்கிருந்து கலைந்து செல்வோம் இல்லையெனில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.
Next Story
