சாம்பவர்வடகரை அரசு பள்ளிக்கு கம்ப்யூட்டர் வாங்க திமுக நிதியுதவி

X
Tenkasi King 24x7 |26 Nov 2025 6:09 PM ISTசாம்பவர்வடகரை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கம்ப்யூட்டர் வாங்க திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் நிதியுதவி வழங்கினார்
தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பேரூர் திமுக சார்பில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கம்ப்யூட்டர் வாங்க நிதியுதவி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பேரூராட்சி தலைவர் சீதாலெட்சுமிமுத்து தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சண்முகவேல் முன்னிலை வகித்தார், பேரூர் திமுக செயலாளர் முத்து அனைவரையும் வரவேற்றார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு பள்ளிக்கு கம்ப்யூட்டர் வாங்க நிதி உதவியை பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாவதியிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி விஜயகுமார், ஒன்றிய பிரதிநிதிகள் சந்திரன், செல்வீன்அப்பாதுரை, பட்டுமுத்து, முத்துக்குமார், அவைத் தலைவர் மாணிக்கம், பொருளாளர் அனைந்தபெருமாள், கவுன்சிலர்கள் சுடலைமுத்து, ரபீக்ராஜா, முன்னாள் பேரூர் செயலாளர் ராமச்சந்திரன், நிர்வாகிகள் சங்கரா ராமன், ஜெயந்தன், பாலமுருகன், ராமசாமி, பத்மநாதன், காதர் மைதீன், சுந்தர்ராஜ், ஐயப்பன், இசக்கிமுத்து மற்றும் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story
