நவோதயா பள்ளி மாணவர்கள் நீச்சல் போட்டியில் அசத்தலான அபார வெற்றி.

கோபிசெட்டிபாளையம் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சிபிஎஸ்இ பள்ளியில் கடந்த வாரம் 22.11.2025 சனிக்கிழமை அன்று நடைபெற்றது. அதில் நமது நவோதயா பள்ளி மாணவர் கர்ஷின் (10-ஆம்வகுப்பு)16 வயதிற்குட்பட்டோர் பிரிவில் கலந்துகொண்டு 50 மீட்டர் பட்டாம்பூச்சி நீச்சல் பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளி பதக்கத்தை பெற்றுள்ளார்.மேலும் 50 மீட்டர் சாதாரண நீச்சல் போட்டியில் வெண்கல பதக்கத்தைப் பெற்றுள்ளார். மேலும் 19 வயதிற்குப்பட்ட போட்டியில் அகில் (11–ஆம் வகுப்பு) 50 மீட்டர் பின்புறமாக நீச்சல் அடித்தல் போட்டியில் 3-ம் இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தைப் பெற்றுள்ளார். மேலும் 50 மீட்டர் சாதாரண நீச்சல் போட்டியிலும்; 50 மீட்டர் பிரிஷ்டொக் பிரிவிலும் 3-ம் இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தைப் பெற்றுள்ளார்.பள்ளியில் நடைபெற்ற வழிபாட்டுக் கூட்டத்தில் பள்ளியின ;செயலாளர் தனபால் அவர்களும், பள்ளியின் பொருளாளர் தேனருவி அவர்களும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார். மேலும் பள்ளி முதல்வர், இருபால் ஆசிரியர்கள், சக மாணவமாணவியர்கள் அனைவரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
