நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரியில் தேசிய அரசியலமைப்பு தினக் கொண்டாட்டம்.
நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் "தேசிய அரசியலமைப்பு தினக் கொண்டாட்டம்" 26/11/25 அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
"எங்கள் அரசியலமைப்பு... எங்கள் பெருமை" என்ற நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் எம். ஆர். லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் கல்லூரியின் துணை முதல்வரும், இளநிலை கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியையுமான ஆர். நவமணி, டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பின் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்நிகழ்வில் எடுத்துரைத்தார்.நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைவரும் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.நிகழ்ச்சியில் என்எஸ்எஸ் அலுவலர்கள் எம். சசிகலா, வீ. கோகிலா, சம வாய்ப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆர். ஏ. அனிதா, உன்னத் பாரத் அபியான் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ். ஹேமலதா உட்பட பேராசிரியப் பெருமக்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story


