இந்திய அரசியல் அமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு.
இந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கைலாசம் வரவேற்புரை ஆற்றினார் நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலர் இடைநிலை கே.எஸ் புருஷோத்தமன் அவர்கள் இந்திய அரசியலமைப்பு நாள் உறுதி மொழியை,அரசியலமைப்பின் முகவுரையைவாசித்தார் ஆசிரியர்கள் மாணவ மாணவியர் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இதனைத் தொடர்ந்து மாணவ மாணவியர் அறிவியல இயக்க மண்டல மாநாட்டில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட்டது இந்திய தேசிய அரசியலமைப்பு சட்டத்தின் தலைவராக இருந்த டாக்டர் அம்பேத்கரின் வரலாற்று நிகழ்வுகளைஓய்வு பெற்ற ஆசிரியர் சீனிவாசன் அவர்களின் வாயிலாக பொம்மலாட்டம் மூலமாக விளக்கிக் காட்டப்பட்டது பள்ளியின் ஆசிரியர் மெய்யழகன் அவர்கள் பல்வேறான உலக நாடுகள் 160 நாடுகளில் நாணயம்சேகரித்து கண்காட்சியினை சிறப்புற அமைத்திருந்தார். பள்ளி தலைமை ஆசிரியர்கைலாசம் தொல்லியல் சார்ந்த 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறை படிமங்களை,விலங்குகளின் எச்சங்களை காட்சிப்படுத்தி வைத்திருந்தவை சிறப்பாக இருந்தது.இந்நிகழ்வில் வட்டார் வளமையாக ஆசிரியர் பெற்றனர் செல்வராணி நன்றி உரையாற்றினார்.



