அரசு மருத்துவமனை சீரமைப்பு செய்ய வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்

வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை சீரமைப்பு செய்ய வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம்
வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த கோரி புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது... வத்திராயிருப்பு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் ஏழை எளிய மக்களின் குடியிருப்புகளுக்கு குடிநீர், தெரு விளக்கு, வாறுகால், மயானத்திற்கு செல்லக்கூடிய பாதை உள்ளிட்டு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தவறிய நிர்வாகத்தை கண்டித்தும், வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையை நவீன மையமாக்காமலும், தரம் உயர்த்தாமலும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததையும் கண்டித்து வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் புதிய தமிழகம் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Next Story