கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு...
Srivilliputhur King 24x7 |26 Nov 2025 7:58 PM ISTஸ்ரீவில்லிபுத்தூர் சமுதாயக்கூடத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி கிராம மக்கள் காத்திருப்போம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....
ஸ்ரீவில்லிபுத்தூர் சமுதாயக்கூடத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி கிராம மக்கள் காத்திருப்போம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நமக்கு நாமே திட்டத்தின் சார்பில் கட்டப்படும் சமுதாயக்கூடத்தை வேறு இடத்தில் கட்ட வலியுறுத்தி கிராம மக்கள் காத்திருப்போம் போராட்டத்தில். ஈடுபட்டுள்ளனர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது பழைய செந்நெல்குளம் கிராமம். ராமச்சந்திராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட இக்கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தின் படி அரசு புறம்போக்கு இடத்தில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கிராமத்தை ஆய்வு செய்து சமுதாய கூடத்திற்க்கான நிலத்தை தயார் செய்தனர். இந்நிலையில் அதே கிராமத்தில் வசிக்கும் வசிக்கும் ஒரு பிரிவினர் தாங்கள் ஏற்கனவே மேற்படி இடத்தில் திருவிழா சமயங்களில் முளைப்பாரி வைத்து வழிபாட்டிற்காக பயன்படுத்திக் கொண்டிருப்பதால் சமுதாயக்கூடம் இப்பகுதியில் கட்டப்பட்டால் தங்களின் திருவிழா காலத்தின் போது இடையூறாக இருக்கும் ஆகவே வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தினர். இராஜபாளையம் தாலுகா உட்பட்ட சம்பந்தப்பட்ட இடத்தை மாற்றுவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இக்கிராம மக்கள் மனு அளித்தது நிலையில் தற்போது வரையில் சமுதாயக்கூடத்திற்கான இடத்தை மாற்ற மாவட்ட நிர்வாகம் முன் வரவில்லை. இதனை கண்டித்து கிராம மக்களின் ஒரு பிரிவினர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்போம் போராட்டத்தில் ஈடுபட்டன.ர் இப்போராட்டத்திற்கு தலைமை ஏற்ற சிபிஎம் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினருமான பாலபாரதி கூறுகையில் மாவட்ட நிர்வாகம் ஒரு சில தனிப்பட்ட நபர்களுக்காக சமுதாய கூடம் அமைவிற்கும் இடத்தை மாற்றாமல் கிராம மக்களுக்கு இடையூறு அளித்து வருவதாகவும் இப்பிரச்சினை தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக முடிவு எடுத்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்ட தலைநகரில் பொதுமக்கள் மற்றும் கிராம மக்களை திரட்டி பெரிய அளவு போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக கூறினார். காத்திருக்கு போராட்டத்தில் கலந்து கொண்ட கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Next Story


