ராமநாதபுரம் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடைபெற்றது
Ramanathapuram King 24x7 |26 Nov 2025 8:22 PM ISTகாலி மது பாட்டில்களை திரும்பப்பெற வலியுறுத்துவதை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் திடீரென இரண்டு மணி நேரமாக கடைகளை பூட்டிவிட்டு மறுப்பு- ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைத்து சாவிகளை ஒப்படைக்கும் போராட்டம் பரபரப்பு நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 109 அரசு மதுபான கடைகள் உள்ளது கடைகளில் சுமார் 850 க்கும் மேற்பட்ட மதுபான விற்பனையாளர்கள் பணியாற்றி வருகின்றனர் தற்போது தமிழக பாட்டில்களை மதுபான கடையில் பெற்றுக் கொண்டு பத்து ரூபாய் கொடுக்க வேண்டும் என்று அரசாணை வெளியிட்டதை திரும்ப பெற வேண்டும் ஸ்டிக்கர் ஒட்டுவதை தவிர்க்க வேண்டும் ஊழியர்களுக்கு போதுமான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட அனைத்து மதுபான கடை விற்பனையாளர்களும் திடீரென கடைகளை அடைத்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு பதட்டமும் நிலவியது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து மதுபான கடை ஊழியர்களும் ஊர்வலமாக ராமநாதபுரம் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை விடுத்தனர் அரசு வாணிபக் கழக மாவட்ட மேலாளர் மதி செல்வன் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார் அரசின் நிலைப்பாடு தமிழகம் முழுவதும் இது பற்றி அரசு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது ஆகையால் போராட்டத்தை கைவிட்டு கடைகளை திறங்கள் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றுவதற்கு அரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்ததை தொடர்ந்து கடைகள் இரண்டு மணி நேரத்திற்கு பின்பு திறக்கப்பட்டது
Next Story


