ராமநாதபுரம் சுற்றுலா வாகனங்கள் விபத்து இரண்டு பேர் உயிர் இழப்பு
Ramanathapuram King 24x7 |26 Nov 2025 8:27 PM ISTஉச்சிப்புளி அருகே சுற்றுலா வானங்கள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலே இரண்டு பேர் உயிர் இழப்பு 13 பேர் காயம்
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகில் சுற்றுலா வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து நடந்ததில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் சுற்றுலா முடித்து சென்னைக்கு டெம்போ டிராவலர் வேனில் வந்த போது ஆந்திராவில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வந்த கார் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை உச்சிப் புளி நாகாச்சி அருகே இன்று நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணம் செய்த பைடி சாய்(23) மற்றும் நவீன்(22) ஆகியோர்கள் சம்பவ இடத்தில் இறந்தனர் 13 பேர் காயம் அடைந்தனர் மேலும் டெம்போ டிராவலர் வேனில் வந்த 5 பெண்கள் உட்பட 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 13 பேர் மீட்கப்பட்டு அனைவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து உச்சிப்புளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story


