இந்தியாவின் தேர்தல் ஆணையமா? பாஜகவின் தேர்தல் ஆணையமா? மனிதநேயமக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல்சமது கேள்வி.


தேசிய அரசமைப்பு தினத்தை முன்னிட்டு அரசமைப்பு முகவுரை உறுதிமொழி ஏற்கும் போது படம் காட்சிகள்
Tiruchirappalli (East) King 24x7 |26 Nov 2025 8:41 PM ISTஇந்தியாவின் தேர்தல் ஆணையமா? பாஜகவின் தேர்தல் ஆணையமா? மனிதநேயமக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல்சமது கேள்வி.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தேசிய அரசமைப்பு தினத்தை முன்னிட்டு அரசமைப்பு முகவுரை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது தலைமையில் அக்கட்சியினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல்சமது, நவம்பர் 26 1949 இல் இந்திய அரசமைப்பு சட்டத்தை கொண்டு வந்த போது ஆர் எஸ் எஸ் நமது பாரம்பரியத்திற்கு எதிரானது என்று அரசமைப்பு சட்டத்தை ஏற்கவில்லை. இந்தியா தொன்மை வாய்ந்த தேசம் மனுஸ்மிரிதிதான் சட்டமாக இருக்க வேண்டும் என்று அம்பேத்கார் தலைமையில் கொண்டுவரப்பட்ட சட்டத்தை நிராகரித்தவர்கள் ஆர்.எஸ்.எஸ்.,ஐ சேர்ந்தவர்கள். இன்று அவர்கள் வழிநடத்தக்கூடிய் பாஜக அரசு அனைத்து மக்களுக்குமான சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை, வேற்றுமையில் ஒற்றுமை என அனைத்தையும் சீர்குலைக்கும் வேளையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசைமைப்பு தினத்தன்று அரசமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்க வேண்டும் என தமிழக முதல்வரின் முயற்சி பாராட்டுக்குறியது. அனைத்து அமைப்புகளும் அரசமைப்புச்சட்டத்தை பாதுகாக்க முன்வரவேண்டும். அதிகாரத்திற்கு வரமுடியாத மாநிலங்களில் எஸ்ஐஆர் மூலம் ஆட்சியை பிடிக்கலாம் அதிகாரத்திற்கு வரலாம் என நினைக்கிறார்கள் நிச்சயமாக தமிழகத்தில் அவர்களது எண்ணம் பலிக்காது. தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை இன்றைக்கு கேள்விக்குறியாக உள்ளது. தேர்தல் ஆணையம் நம்பிக்கையற்ற நிலையில் இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டை வழிநடத்தக் கூடிய தேர்தல் ஆணையம் இவ்வளவு மோசமான நிலையில் என்றைக்கும் இருந்ததில்லை. பாஜக தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை குழைத்துள்ளது. இது இந்தியாவின் தேர்தல் ஆணையமா பாஜகவின் தேர்தல் ஆணையமா என்ன கேட்கும் அளவிற்கு வந்துள்ளது. என அவர் குற்றம்சாட்டினார்.
Next Story



