காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் தேர்வு குறித்த கூட்டம்.

காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் தேர்வு குறித்த கூட்டம்.
X
ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் மண்டபத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் தேர்வு குறித்த கூட்டம் நடைபெற்றது
காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் தேர்வு குறித்த கூட்டம். ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் மண்டபத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் தேர்வு குறித்த கூட்டம் முன்னாள் அகில இந்திய தேசிய காங்கிரஸ் செயலாளர் விஸ்வரஞ்சன் மெஹந்தி தலைமையில் நடைபெற்றது. அப்போது கட்சியினர் கூறும் போது,இனி வரும் மாவட்ட தலைவர் காங்கிரஸ் கட்சியை கிராமம் தோறும் கொண்டு செல்ல வேண்டும். அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும். ராகுல் காந்தியை பிரதமராக வேண்டும் என்றனர். இதில், ஐ.என்.டி.யுசி. மாநில பொதுச் செயலாளர் அண்ணாதுரை, பொதுக் குழு உறுப்பினர் பி.ஏ. குமாரசாமிராஜா, மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் அய்யனர், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட துணைத் தலைவர் ஜான் கெண்ணடி, நகர தலைவர் முருகன் உள்பட பலர் கொண்டனர்.
Next Story