ராமநாதபுரம் பயணிகளின் நிழற் குடைமாற்ற பொதுமக்கள் கோரிக்கை
Ramanathapuram King 24x7 |27 Nov 2025 9:26 AM ISTதிருவாடானை அருகே பயணிகள் நிழற்குடை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது மக்கள் அச்சத்தில் உள்ளனர்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையிலிருந்து திருவெற்றியூர் செல்லும் சாலை பகுதியில் படப்பை, குளத்தூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு,ப் பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் உள்ள பயணியர் நிழற்குடை தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இந்த பயணியர் நிழற்குடை எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடிய அபாயகரமான நிலையில் உள்ளது. அதன் சிமெண்ட் காரைகள் அனைத்தும் பெயர்ந்து விழுந்துவிட்டதால், உள்ளே இருக்கும் இரும்புக் கம்பிகள் வெளிப்படையாகத் தெரிகின்றன. இந்த நிலைமை பயணிகளுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. பயணியர் நிழற்குடை மோசமான நிலை காரணமாக, பயணிகள் அங்கு நின்று பேருந்துக்காகக் காத்திருக்க மிகவும் பயப்படுவதாகத் தங்கள் கவலையைத் தெரிவித்துள்ளனர். இந்த பயணியர் நிழற்குடை பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதால், உடனடியாக சீரமைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆபத்தான சூழல், அப்பகுதி மக்களின் அன்றாடப் பயணத்தில் பெரும் இடையூறாக உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விஷயத்தில் உடனடியாக கவனம் செலுத்தி, பயணியர் நிழற்குடை சீரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story


