ராமநாதபுரம் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது
Ramanathapuram King 24x7 |27 Nov 2025 9:32 AM ISTராமேஸ்வரத்தில் திருமணம் மீறிய உறவில் இருந்த இரண்டாவது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவனை போலீஸார் கைது செய்தனர். ராமேஸ்வரம் பருவதம் பகுதியில் குடியிருப்பவர் கார்மேகம் (64). இவர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் காவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்று, தற்பொழுது தற்காலிக காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரின் முதல் மனைவி 2013 ஆம் வருடம் இறந்து விட்ட பிறகு 2018ம் வருடம் பரமக்குடி வசந்தபுரத்தைச் சேர்ந்த கஸ்தூரி (47) என்பவருடன் இரண்டாவது மனைவியாக திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வந்துள்ளார். கஸ்தூரிக்கு பரமக்குடியில் வசித்து வரும் பொழுது முருகேசன் என்பவருடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்த தொடர்பு இருவருக்குமிடையே நீடித்து வந்துள்ளது. இதனால் கார்மேகத்திற்கும், கஸ்தூரிக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து இருவருக்கும் சண்டை ஏற்பட்டு கார்மேகம், தன்னிடமிருந்த கத்தியை கொண்டு கஸ்தூரியை குத்தி உள்ளார்.இதனால் சம்பவ இடத்திலேயே கஸ்தூரி உயிரிழந்தார். தகவலறிந்த போலீஸார் கஸ்தூரியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார்மேகத்தை ராமேஸ்வரம் நகர காவல்நிலைய போலீஸார் கைது செய்தனர்.
Next Story


