துணை முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு ராசிபுரத்தில் அரசு பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம்,பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது...

X
Rasipuram King 24x7 |27 Nov 2025 7:40 PM ISTதுணை முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு ராசிபுரத்தில் அரசு பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம்,பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது...
தமிழக துணை முதல்வரும்,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு தமிழகத்தில் திமுக கட்சி நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கோனேரிப்பட்டி பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நாமக்கல் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சத்தியசீலன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு இலவசமாக நோட்டுப் புத்தகங்களும் பேனா மற்றும் இனிப்புகளை வழங்கி பிறந்தநாள் கொண்டாடினர். பள்ளியில் உள்ள குழந்தைகள் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாட்டு பாடி வாழ்த்து கூறினர். அதனை தொடர்ந்து அப்பகுதியில் 100 மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.உடன் திமுக நகர கழக செயலாளர் என்.ஆர்.சங்கர், இராசிபுரம் நகர மாணவர் அணி அமைப்பாளர் சகாதேவன், மற்றும் துணை அமைப்பாளர்கள் ச.ஆனந்தபாபு, அஜித்குமார், சௌந்தர், மேலும் இந்நிகழ்வில் 27வதுவார்டு கழக செயலாளர் கந்தசாமிMC , 25வது வார்டு கழக செயலாளர் பாலு, 4வது வார்டு கழக செயலாளர் தங்கதுரை, 14வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி ஆனந்த், மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் கீதா இராசிபுரம் நகர இளைஞர் அணி அமைப்பாளர் ராஜா(எ) யோகராஜன் மற்றும் கழக வார்டு பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழக மூத்த முன்னோடிகள், ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்..
Next Story
