ராமநாதபுரம் துணை முதலமைச்சர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது
Ramanathapuram King 24x7 |28 Nov 2025 5:18 AM ISTகமுதி வடக்கு ஒன்றியம் மற்றும் கமுதி,அபிராமம் பேரூர் கழகம் சார்பில் திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 48 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வடக்கு ஒன்றியம் மற்றும் கமுதி,அபிராமம் பேரூர் கழகம் சார்பில் திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 48 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கமுதி பேருந்து நிலையம் முன்பு கேட் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி 500 க்கும் மேற்பட்டவர்ளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். ராமநாதபுரம் மாவட்டம், மாவட்ட கழக செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் வழிகாட்டுதலின் பேரில் கமுதி வடக்கு ஒன்றியம்,கமுதி,அபிராமம் பேரூர் கழகம் சார்பில் திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 48 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றிய செயலாளர் வாசுதேவன்,பேரூர் கழக செயலாளர் பாலமுருகன் ஆகியோர் தலைமையில் 200 க்கும் மேற்பட்டவர்கள் இரு வண்ண கொடியுடன் பேரணியாக வந்து கமுதி பேருந்து நிலையம் முன்பு கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர். வரும் 2026 சட்ட மன்ற தேர்தலில் 234 தொகுதியில் 200 தொதிகளை வென்றெடுத்து இரண்டாவது முறையாக மு.க ஸ்டாலின் அவர்களை முதல்வராக்க உழைத்திட வேண்டும் என உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இதன் பின்னர், 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு ஏழை,எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், கமுதி ஊராட்;சி ஒன்றிய முன்னாள் சேர்மன் தமிழ்செல்வி போஸ்,துணைத்தலைவர் அய்யனார். அவைத்தலைவர் ராஜேந்திரன்,மாவட்ட பிரதிநிதி பாரதிதாசன்,காசிலிங்கம்,ஜேசுராஜ்,மணிகண்டன்,வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிரஞ்சீவி மற்றும் மாநில,மாவட்ட,ஒன்றிய பேரூர் கழக நிர்வகிகள் கலந்துகொண்டனர்.
Next Story


