ராமநாதபுரம் விவசாய சங்கம் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட மத்திய மாநில அரசை வலியுறுத்தி தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் வருகின்ற புதன் கிழுமை புதன்கிழமை காலை 10.00 மணி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ராமநாதபுரம் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்கதிர்கள் பருவம் தவறி பெய்த மழையால் மீண்டும் முளைத்த நெல்லுக்கு ஓராண்டாகியும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.8000/- பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த அதீத கனமழை மற்றும் பருவம் தவறிபெய்த மழையால் முற்றிலுமாக அழிந்த உ மிளகாய் விவசாயிகளுக்கு ஓராண்டாகியும் நிவாரண தொகையையோ, முழுமையான பயிர் காப்பீட்டு தொகையையோ வழங்காதது ஏன் ராமநாதபுரம் மாவட்டத்தை இயற்கை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவித்து அனைத்து விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு கடனை முழுமையாக தள்ளுபடி செய்க ! சுல்தான் இஸ்மாயில் குழு ONGC ஆய்வு அறிக்கையை தமிழக அரசு கெசட்டில் வெளியிடு. கண்மாய்களின் தேசமான ராமநாதபுரம் மாவட்டம் 16500 ஹெக்டேர் மிளகாய் சாகுபடியில் தமிழ்நாட்டில் முதலிடம்,12000 ஹெக்டேர் பருத்தி சாகுபடியில் தமிழ்நாட்டில் முதலிடம்,1.37 லட்சம் 6 ஹெக்டேர் நெல் சாகுபடியில் தமிழ்நாட்டில் நான்காமிடம் இத்தகைய சிறப்புகளை பெற்ற வைகை படுகை பகுதியான ராமநாதபுரம் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளான் மண்டலமாக அறிவித்திடு. விவசாயிகள், விவசாய தொழிளாலர்கள் அனைத்து விவசாய சங்கங்கள் பங்கேற்க அன்புடன் அழைக்கின்றோம். அனைவரும் வருக தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
Next Story