இலங்கையில் போதைப்பொருள் பறிமுதல் ஐந்து பேர் கைது
Ramanathapuram King 24x7 |28 Nov 2025 8:24 AM ISTயாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களுடன் ஐந்து பேர் கைது
யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் பொலிஸார் நடத்திய சோதனை நடவடிக்கைகளின்போது குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நான்கு ஆண்களும் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் ஒரு பெண்ணும் கைதுசெய்யப்பட்டனர். மில்லிகிராம் மற்றும் கிராம் அளவில் மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பில் சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த யாழ்ப்பாணம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Next Story


