முடிந்த பணி கல்வெட்டுகளில் எனது பெயர் போடுங்கள்வார்டு செயலாளர் தானே கவுன்சிலர் என கூறிக் கொள்வதாக கூறியதால் நகர்மன்ற கூட்டத்தில் கலகலப்பு

முடிந்த பணி கல்வெட்டுகளில் எனது பெயர் போடுங்கள்வார்டு செயலாளர் தானே கவுன்சிலர் என கூறிக் கொள்வதாக கூறியதால் நகர்மன்ற கூட்டத்தில் கலகலப்பு
X
எனது வார்டில் பணிகளில் கல்வெட்டுகளில் எனது பெயர் இல்லை. சில வார்டுகளில் பெயர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது எனது வார்டில் அதுவும் இல்லை வார்டு செயலாளர் கவுன்சிலர் என சொல்லக்கூடாது என சொல்கிறார். அனைத்து பணிகளையும் தான்தான் செய்வதாக சொல்லிக் கொண்டுள்ளார்என நகர்மன்ற கூட்டத்தில் புலம்பியபெண் கவுன்சிலர்
திருச்செங்கோடு நகராட்சியின் சாதாரண கூட்டம் நகர்மன்ற கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.கூட்டத்துக்கு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமை வகித்தார் ஆணையாளர் வாசுதேவன் பொறியாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்குறள் வாசித்து கூட்டத்தை தொடங்கியநகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய போது கூறியதாவது பத்தாவது வார்டு அதிமுக உறுப்பினர் ராஜவேல் பழைய பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டு புதிய வணிக வளாக கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பல ஆண்டுகளாக பேருந்து நிலைய வளாகத்தில் இருந்த மணிக்கூண்டு அகற்றப்பட்டுள்ளது மீண்டும் அதை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்செங்கோடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே மாணவர் விடுதி ஒன்று காலி செய்யப்பட்டு புதிய கட்டிடம் காலியாக உள்ளது அதனை ஏதாவது பணிகளுக்கு பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.சட்டை புதூர் நகராட்சி பள்ளியில் ஒரே அறைக்குள் அங்கன்வாடிசத்துணவு கூடம் இரண்டும் செயல்பட்டு வருகிறது ஏற்கனவே அங்கு ஒரு கட்டிடம் உள்ளது திறப்பு விழா காணப்படாமல் உள்ளது அதனை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.நகரில் உள்ள அனைத்து சாக்கடைகளையும் ஆளப்படுத்த வேண்டும்.அம்மன் குளம் நடைபாதை பகுதியை சீரமைக்க தனியார் வசம் ஒப்படைப்பு செய்யப்பட்டதாக கூறப்பட்டது பல மாதங்கள் ஆகியும் இன்னும் பணிகள் நடைபெறவில்லை அவர்களால் செய்ய முடியாவிட்டால் வேறு யாருக்காவது கொடுக்கலாம் நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு நிச்சயமாக மணிக்கூண்டு அங்கே நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.மாணவர் விடுதியை என்ன பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகத்திடம் பேசி முடிவெடுக்கப்படும்சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதியஅங்கன்வாடி மைய கட்டிடம் திறக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.அம்மன் குளக்கரை சீரமைப்பு பணிகள் விரைவில் நடக்க உள்ளது இரண்டாவது வார்டு அதிமுக உறுப்பினர் கார்த்திகேயன் சண்முகபுரம் பகுதியில் உப்பு நீர் குழாய் அமைக்க வேண்டும் என 2024ிலும் தீர்மானம் கொடுத்தோம் 2025ல தீர்மானம் கொடுத்திருக்கிறோம் ஆனால் இதுவரை உப்பு நீர் குழாய் அமைக்கும் பணி நடைபெறவில்லை சண்முகபுரம் பகுதிக்கு ஆற்றில் ஏறும் சரிவர வருவதில்லை உப்பு நீரும் வழங்கப்படவில்லை இதில் இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றியும் பணிகள் நடக்காததற்கு என்ன காரணம் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் பொறியாளர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பொறியாளர் சரவணன் ஒரே ஒப்பந்ததாரர் சுமார் 7 வாழ்த்துகளில் வேலை செய்வதால் பணி தாமதமாகிறது விரைவில் பணி முடித்துக் கொடுக்கப்படும் நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு மாற்றுத்திறனாளிகளைபிரதிநிதித்துவப் படுத்த வேண்டும் என்பதற்காக மாற்றுத்திறனாளி ஒருவரை நியமன உறுப்பினராக இணை அமைத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதோடு இன்று முதல் முறையாக நகர்மன்ற கூட்டத்திற்கு வந்துள்ள மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதியாக வந்துள்ள பாரத் அவர்களை வருக வருக என வரவேற்று மகிழ்கிறோம் ஐந்தாவது வார்டு திமுக உறுப்பினர் ராஜா கோழிக்கால் நத்தம் பகுதியில் கழிவு நீர் கால்வாய்களை அகலப்படுத்தி தரவேண்டும் என ஒன்று, ஐந்து,ஆறு, ஆகிய வார்டுகள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.ஏற்கனவே பழைய பேருந்து நிலையத்திற்கு முன்னால் நகர்மன்ற தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான டிபி ஆறுமுகம் பெயர் வைக்கப்பட்டிருந்தது தற்போது கட்டப்பட்டு வரும் புதிய வணிக வளாகத்திற்கும் அவரது பெயரை சூட்ட வேண்டும் பத்தாவது வார்டு அதிமுக உறுப்பினர் ராஜவேல் மாற்றுத்திறனாளி ஒருவரை நகர்மன்ற உறுப்பினராக நியமனம் செய்திருப்பது வாழ்த்துகிறோம் அவருக்கு வாக்குரிமை உண்டா அவர் நகர் மன்றத்தில் ஏதாவது வாக்களிக்க வேண்டிய நிலை வந்தால் வாக்களிக்க முடியுமா இல்லை சட்டமன்றத்தில் ஆங்கிலோ இந்திய நியமன உறுப்பினர்கள் போல் வாக்களிக்கும் உரிமை இல்லாதவராக இருப்பாரா நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் இவர்களுக்கான அதிகார வரம்பு குறித்தபணிவரம்பு குறித்த திட்ட வரைவுகள் அரசால் தயாரிக்கப்பட்டு கொண்டிருக்கிறது அதில் என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ அறிவிக்கப்பட்டவுடன் அதன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் நகர்மன்ற தலைவர்நளினி சுரேஷ் பாபு பழைய பேருந்து நிலைய வணிக வளாகத்திற்கு டிபி ஆறுமுகம் அவர்கள் பெயரை வைக்க ஆவண செய்யப்படும் 32 வது வார்டு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உறுப்பினர் அசோக் குமார் ரோடு விரிவாக்கத்தின் போது உடைபட்ட குழாய்கள் சீரமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை இப்பொழுது அந்த பகுதியில்பேவர் பிளாக் கற்கள் பதித்து விட்டார்கள் இனி எப்போது செய்யப் போகிறீர்கள் பொறியாளர் சரவணன் ரோடு போடுபவர்கள் உடனடியாக போட்டு விடுகிறார்கள்நாம் திருமணம் வைத்து டெண்டர் விட்டு முறைப்படி பணிகள் செய்ய இருப்பதால் காலதாமதம் ஆகிறது நிச்சயம் செய்து தருகிறோம் 31 வது வார்டு திமுக நகர் மன்றஉறுப்பினர் முருகேசன்  கார் பார்க்கிங்அமைப்பது குறித்து கேட்டிருந்தேன் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது எனது பகுதியில் 150 மீட்டர் மழை நீர் வடிகால் எனது வார்டு பகுதியில் ஒரு 150 மீட்டர் மழை நீர் வடிகால் அமைக்க வேண்டும் என கேட்டிருந்தோம் பொறியாளர் சரவணன் கார் பார்க்கிங் குறித்து திட்ட வரவை தயாரிக்கப்பட்ட அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது மழை நீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் 27 வது வார்டு திமுக நகர் மன்ற உறுப்பினர் அண்ணாமலை எனது வாழ்வில் உள்ள அங்கன்வாடி மையம் முன் ஷாபர் பிளாக் கள்கள் பெயர்ந்துள்ளது இதனால் குழந்தைகள் தடுக்கிவிழும் அபாயம் உள்ளது எனவேசிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும்.நரிப்பள்ளம் அம்பேத்கர் சிலை அருகே ஒரு 100 அடிதொலைவுக்கு கால்வாய் இல்லாமல் இருப்பதால் கழிவுநீர் ரோட்டில் தேங்கும் நிலை உள்ளது குப்பண்ணன் கோவில் அருகில் கான்கிரீட் ரோடு அமைத்து தர வேண்டும் நரிப்பள்ளத்தில் உள்ள உயர்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது நகராட்சி பொறியாளர் சரவணன் மழை நீர் வடிகால் அமைக்க பணிகள் ஒட்டுமொத்தமாக மேற்கொள்ளும் போது உங்கள் பகுதியிலும் சீரமைத்து தரப்படும் உயர்நிலை நீர் தேக்க தொட்டி சீரமைக்க திட்ட விரைவு கொடுக்கப்பட்டுள்ளது இருக்கும் இடத்திலேயே அமைக்க திட்டம் கொடுக்கப்பட்டுள்ளதால் மாற்று இடம் தேர்வு செய்வது குறித்து பின்னர் தான் கேட்க வேண்டும் ஆறாவது வார்டு திமுக நகர் மன்ற உறுப்பினர் தாமரைச்செல்வி மணிகண்டன் எனது வார்டில் ஆனந்தகுமார் என்கிற தனிநபர் ஒருவர் துப்புரவு பணியாளர்களை மிரட்டும் துணியில் பேசி வருகிறார் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்எனது வாழ்வில் சில இடங்களில் மின்விளக்கு வசதி இல்லாமல் இருக்கிறது அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு அவர் உங்களுக்கு மட்டுமல்ல நகர்மன்ற தலைவருக்கும் தினமும் ஏதாவது ஒரு குறை சொல்லி போன் செய்து கொண்டே இருக்கிறார் ஆணையாளருக்கும் போன் செய்கிறார் பொறியாளருக்கு போன் செய்கிறார் மாவட்ட ஆட்சித் தலைவர் வரை இதே போல் செய்து கொண்டிருக்கிறார் அவர் குறித்து கவனித்து நடவடிக்கை எடுக்கப்படும். மின்விளக்கு குறித்து உறுப்பினர் கேட்டது ஏற்கனவே மின் கம்பங்கள் இருந்தால் உடனடியாக அமைத்து தரப்படும் இரண்டாவது வருட அதிமுக உறுப்பினர் கார்த்திகேயன் எனது வார்டிலும் 15 இடங்களில் மின்விளக்கு அமைத்து தர வேண்டும் நாலாவது வார்டு திமுக உறுப்பினர் ரமேஷ் எட்டிமடை பகுதியில் உப்பு தண்ணீர் வசதி இல்லை நல்ல தண்ணீரும் வருவதில்லை எனவே ஏற்கனவே உள்ள ஆழ்துளை கிணற்றில் சிறு மின் மோட்டார் அமைத்து தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொறியாளர் சரவணன் மின்கட்டண பாக்கி அதிகமாக இருப்பதால் புதிய மின் மோட்டார் அமைப்பது சாத்தியமில்லாததாக இருக்கிறது சிறு மின்மோட்டார் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் இருபதாவது வார்டு திமுக உறுப்பினர் சண்முகவடிவு எனது வாழ்வில் உள்ள மணக்காடு பகுதியில் புதர் மண்டி கிடைக்கிறது இதனால் அந்த பகுதியில் பாம்புகள் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர் உடனடியாக குதிரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் பாரதி தேடல் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட திறப்பு விழா காணப்பட்ட பணிக்கு கல்வெட்டு இதுவரை வைக்கவில்லை இன்னும் பல இடங்களில் கல்வெட்டு வைத்திருக்கும் இடங்களில் எனது பெயர் கல்வெட்டில் இல்லை பத்தாவது வார்டு உறுப்பினர் குறிப்பிட்டது போல் அவருக்காவது ஸ்டிக்கர் ஒட்டி இருக்கிறார்கள் எனக்கு அதுவும் இல்லை ஏற்கனவே எனது வார்டில் ஆறாவது வார்டில் உள்ளது போல் திமுக கிளைக் கழக செயலாளராக உள்ளஒருவர் நான்தான் கவுன்சிலர் எனக் கூறிக் கொண்டு அனைத்து பணிகளையும்தானே செய்வதாக பொதுமக்களிடம் பேசி வருகிறார் துப்புரவு பணியாளர்களிடம் அதிகாரம் செலுத்துகிறார் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமுக்கு அவருடைய படம் போட்டு அழைப்பிதழ் போல் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அழைக்கிறார் இப்பொழுது வாழ்வு கவுன்சிலர் நானா அவரா என்கிற சந்தேகம் எனது வாழ்வில் உள்ள பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் நடந்து முடிந்த பணிகளில் வைக்கப்படும் கல்வெட்டுகளில் எனது பெயர் இடம்பெறாமல் இருந்தால் யார் கவுன்சிலர் என பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு விடும் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு இதுகுறித்து உங்கள் கட்சி நகர செயலாளரிடம் கூறி இருவரும் அவனது பேசி உரிய முடிவெடுக்க வேண்டும் ஒரு நகர் மன்ற உறுப்பினர் செய்யும் பணிகளை புறக்கணிக்கும் வகையில் யாரும் நடந்து கொள்ளக் கூடாது உடனடியாக நடந்து முடிந்து திறப்பு விழா காணப்பட்ட பகுதிகளில் வைக்கப்படும் கல்வெட்டுகளில் நகர்மன்ற உறுப்பினர் பெயர் பொறிக்க நடவடிக்கை எடுக்கப்படும்என கூறினார் கூட்டத்தில்33 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.
Next Story