விவசாயிகள் குறைத்திருக்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்.

விவசாயிகள் குறைத்திருக்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்.
X
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தின் இயல்பு மழை அளவு 716.54 மி.மீ. தற்போது வரை (25.11.2025) 712.15 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் முடிய இயல்பு மழையளவு 680.78 மி.மீ. இயல்பு மழையளவை விட நவம்பர் மாத கூடுதலாக 31.37 மி.மீ அதிகமாக மழை பெறப்பட்டுள்ளது. நடப்பாண்டில் அக்டோபர் 2025 மாதம் வரை நெல் 5,156 எக்டர், சிறுதானியங்கள் 69,767 எக்டர், பயறு வகைகள் 9,487 எக்டர், எண்ணெய் வித்துக்கள் 28,842 எக்டர், பருத்தி 1,691 எக்டர் மற்றும் கரும்பு 8594 எக்டர் என மொத்தம் 1,23,536 எக்டரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.தோட்டக்கலைப் பயிர்களில் தக்காளி 537 எக்டர், கத்திரி 342 எக்டர், வெண்டை 248 எக்டர், மிளகாய் 109 எக்டர், மரவள்ளி 1,068 எக்டர், வெங்காயம் 2,455 எக்டர், மஞ்சள் 2,261 எக்டர் மற்றும் வாழை 2,356 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விதைகள் மற்றும் உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி பூச்சியியல் வல்லுநர் திரு.சங்கர் அவர்கள், தற்பொழுது சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் மற்றும் கரும்பு பயிருக்கான பூச்சி மற்றும் நோய் மேலாண்மை தொடர்பாக விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சியளித்தார்.நாமக்கல் மாவட்டத்தில் நடப்பு 2025-26 ஆம் ஆண்டு இரபி பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பிர்க்கா / வருவாய் கிராமங்களில் சாகுபடி செய்யப்படும் நெல், சோளம், மக்காசோளம், உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, கரும்பு, பருத்தி, மரவள்ளி, சிறிய வெங்காயம், வாழை, தக்காளி ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.மேலும், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் விவசாய பெருமக்கள் 200-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் .க.பா.அருளரசு, வேளாண்மை துணை இயக்குநர் ப.கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) க.இராமச்சந்திரன் துறைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story