நியமன கவுன்சிலர் பொறுப்பேற்பு

X
Komarapalayam King 24x7 |28 Nov 2025 7:45 PM ISTகுமாரபாளையத்தில் நியமன கவுன்சிலர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி பொறுப்பு வழங்க தமிழக அரசு முடிவு செய்ததையடுத்து, அனைத்து பகுதியிலும், நியமன கவுன்சிலர்கள் நிரயமன் செய்யப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் நகராட்சி சார்பில் பிரபாகரன் தேர்வு செய்யபட்டு, நேற்று பொறுபேற்றுக் கொண்டார். இவருக்கு நகராட்சி ஆணையர் ரமேஷ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பிரபாகரன் கூறியதாவது: சி.பி.ஐ. கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி. யில் மாவட்ட் குழு உறுப்பினராக உள்ளேன். கோவில் மனைகளில் குடியிருக்கும் நபர்களை காலி செய்யச் சொல்லி அறநிலையத்துறையினர் கூறி வருகின்றனர். இது கூடாது. நிலமற்றவர்களுக்கு நிலம், வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீடு கட்டும் கொடுக்கும் திட்டங்களை செயல்படுத்தும் அரசு, இது போன்ற கோவில் மனைகளில் சுமார் 30க்கும் மேலான ஆண்டுகளாக வசித்து வருபவர்களை காலி செய்யக் கூடாது என போராடி வருகிறேன். தமிழக வீட்டு வசதி திட்டத்தின் கீழ கடனுதவி பெற்று, தவணைகளை, தன குடும்ப சூழ்நிலையால் செலுத்த முடியாமல் போகும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை, கண்டித்து, உரிய காலஅவகாசம் வழங்க வேண்டும், திருப்பி செலுத்த வேண்டிய தவணைகளை எளிதாக செலுத்தும் வகையில் தவணை தொகைகளை குறித்து, மாதங்கள் அதிகபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருவதுடன், இதற்காக 2005ல், தி.மு.க. அரசால் 651 கோடி ரூபாய் தள்ளுபடி செய்ய வைத்துள்ளேன். இந்த செயலுக்காக 2008ல் அப்போதைய கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா வசம் விருது வாங்கியுள்ளேன். சிறுசாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்க தலைவராகவும் இருந்து கொண்டு, சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற, பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க போராடி வருகிறார். இந்த தகுதிகளின் அடிப்படையில் எனக்கு இந்த நியமன கவுன்சிலர் பொறுப்பு வழங்கபட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
