அதிசய மாட்டினை வணங்கிய பொதுமக்கள்

அதிசய மாட்டினை வணங்கிய பொதுமக்கள்
X
குமாரபாளையத்தில் அதிசய மாட்டினை கண்டு பொதுமக்கள் வணங்கினர்.
திருப்பதியை சேர்த்தவர் ஏழுமலை, 45. இவர் சரக்கு வாகனத்தில் இரண்டு மாடுகளை ஏற்றிக் கொண்டு வந்து, பொதுமக்கள் அதிகம் கூடும் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, போலீஸ் ஸ்டேஷன் பிரிவு உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார். ஒரு மாட்டிற்கு மூன்று கொம்புகள், மூன்று கண்கள், மற்றொரு மாட்டிற்கு 5 கால்கள் உள்ளது என இவர் சொல்ல, பொதுமக்கள் பெருமளவில் ஒன்று திரண்டு, அதிசய மாட்டினை வணங்கி, காணிக்கை போட்டு சென்றனர்.
Next Story