உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா

X
Komarapalayam King 24x7 |28 Nov 2025 8:03 PM ISTகுமாரபாளையத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
குமாரபாளையம் அருகே வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் நாச்சிமுத்து, மாணவரணி அமைப்பாளர் உதயகுமார் தலைமையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டது. ஓலப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணாக்கர்களுக்கு பேனா, பென்சில் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திக் ஏற்பாட்டில், தட்டான்குட்டை ஊராட்சி அன்னை ஆதரவற்றோர் மையத்தில் காலை மற்றும் மாலை அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் சவுந்திரம், ராஜேந்திரன், ஜான்பீட்டர், விஜயகுமார், முரளி, மாதேஸ்வரன்,உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story
