வங்கியில் உரிமை கோராத வைப்பு தொகை திரும்ப ஒப்படைப்பு நிகழ்ச்சி

X
Tenkasi King 24x7 |28 Nov 2025 10:19 PM ISTவங்கியில் உரிமை கோராத வைப்பு தொகை திரும்ப ஒப்படைப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (28.11.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் RBI மூலம் வங்கியின் முயற்சியில் நீண்ட நாட்களாக உரிமை கோரப்படாத வைப்புத் தொகையினை (Claim) ஆகாத தொகையினை வாரிசுதாரர்களுக்கு திருப்பி வழங்கினார்கள். இந்திய அரசின் நிதி சேவைகள் துறையின் மூலம் உங்கள் பணம் உங்கள் உரிமை என்ற திட்டம் துவங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலமாக முகாம் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது இந்த முகாம் வருகிற டிசம்பர் 31 ஆம் தேதி வரை நடைபெறும். ஆகவே வங்கிகள் மற்றும் நிதி சார் நிறுவனங்களில் இருந்து சம்பந்தப்பட்ட வைப்புத் தொகையாளர்கள் அல்லது இறந்த வைப்புத் தொகையாளர்களின் பரிந்துரைக்கப்பட்டவர்களின் சரியான ஆதாரங்களை சமர்ப்பித்து உரிமை கோரப்படாத தொகையை வட்டியுடன் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அதன் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு வங்கிகளில் உரிமை கோரப்படாத சுமார் 2,54,276 கணக்குகளில் 44.08 கோடி உள்ளது. இதில் தற்போது வரை 72 கணக்குகளில் ரூ.18.07 லட்சம் இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் www.udgam.rbi.org.in என்ற இணையதளத்தில் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில் தங்களது உரிமை கோரப்படாத வைப்புத் தொகை இருப்பின் அதை கே.ஒய்.சி(KYC) ஆவணங்களுடன் சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்தார்.
Next Story
