ராமநாதபுரம் கடற்கரை பகுதிகளில் எம்எல்ஏ ஆய்வு செய்தார்

X
Ramanathapuram King 24x7 |29 Nov 2025 2:22 PM ISTடிட்வா புயல் கீழக்கரை கடற்கரை பகுதியில் இருசக்கர வாகனத்தில் எம்எல்ஏ ஆய்வு செய்தார்
ராமநாதபுரம் மாவட்டத்தில் டிட்வா புயலின் எதிரொலியாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது இதனை ஒட்டி ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் கீழக்கரை கடற்கரை பகுதியில் மக்கள் குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அரசு அதிகாரிகளோடு ஆய்வு செய்தார் மேலும் நீண்ட நாட்களாக பதினைந்தாவது வார்டுக்கு உட்பட்ட பன்னாட்டார் தெருவில் உள்ள பொதுக்கழிப்பறை கிடப்பில் உள்ளதை பார்வையிட்டு அடுத்த மாத இறுதிக்குள் முடித்து தர வாக்குறுதிஅளித்துள்ளார் மேலும் வள்ளல் சீதக்காதி சாலையில் கழிவு நீர் குழாய் அமைத்து நிரந்தர தீர்வு காணப்படும் எனவும் 21 குச்சி மீனவர் குப்பம் கடற்கரைப் பகுதியை பகுதியை பார்வையிட்டார் அவருடன் கீழக்கரை நகர்மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் இப்திகார் ஹசன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்
Next Story
