திருச்செங்கோட்டில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்
Tiruchengode King 24x7 |29 Nov 2025 7:01 PM ISTதிருச்செங்கோட்டில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, வருவாய் கோட்டாட்சியர் லெனின்,திருச்செங்கோடு தாசில்தார் கிருஷ்ணவேணி ஆகியோர் தொடங்கிவைத்தனர்
திருச்செங்கோட்டில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. திருச்செங்கோடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் வருவாய் கோட்டாட்சியர் லெனின் நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தாசில்தார் கிருஷ்ணவேணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட நல அலுவலர் மருத்துவர் பூங்கொடி (வட்டார மருத்துவ அலுவலர் அருள் நகர் நல அலுவலர் மணிவேல்நகர் மன்ற உறுப்பினர்கள் திவ்யா வெங்கடேஸ்வரன் செல்வராஜவேல் சினேகா ஹரிகரன் சண்முக வடிவு மகேஸ்வரி புவனேஸ்வரி உலகநாதன் ராஜா செல்லம்மாள் தேவராஜன் குழந்தைகள் நல அலுவலர் வித்யாலட்சுமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் முகாமில் கலந்து கொண்டபொது மக்களுக்கு முகாமில் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் ஆண் பெண் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை ஆலோசனை, எலும்பியல்மற்றும் மூட்டு சிகிச்சை, குழந்தைகள் நல மருத்துவம், இருதய மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் நோய் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, மருத்துவம், மனநல மருத்துவம், பிசியோதெரபி, நுரையீரல் மருத்துவம், நீரிழிவு நோய் பரிசோதனை, எக்ஸ்-ரே,மற்றும் ஆயுஷ் மருத்துவம் என பதினாறு சிகிச்சைகள் மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டது. ரத்தப் பரிசோதனை புற்றுநோய் பரிசோதனை எக்ஸ்ரே, இசிஜி,எக்கோ மற்றும் யூ எஸ் ஜி ஸ்கேன் ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரைபரிசோதனைக்கு பின் மருந்துகள் முகாமிலேயே வழங்கப்பட்டது உயர்தர சிகிச்சைகள் தேவைப் படுபவர்களுக்கு அரசு மருத்துவமனை மற்றும் காப்பீட்டு திட்டம் உள்ள மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முகாமுக்கு வருபவர்களை வழிகாட்ட சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் பணியமர்த்தப்பட்டு இருந்தனர். வயது முதிர்ந்தோர் நடக்க முடியாதவர்கள் மருத்துவ முகாமில் முழு பரிசோதனை செய்துகொள்ள சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குடிநீர் வசதி செய்யப் பட்டிருந்தது.முகாமில் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் முழு தேக உடல் பரிசோதனை செய்து கொண்டனர்.முகாமிற்கு வந்துள்ளவர்கள்விழிப்புணர்வு பெறும் வகையில் எஸ் ஐ ஆர் படிவங்கள் பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டுகோள் வைத்து விளம்பரங்கள் செய்யப்பட்டது முகாமை பார்வையிட்ட அதிகாரிகள் நகர மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்களிடம் எஸ் ஐ ஆர் படிவங்களைஉரிய வகையில் பூர்த்தி செய்து ஒப்படைக்க கேட்டுக் கொண்டனர்.
Next Story



