ராசிபுரம் அருகே ராஜபாளையம் கிராமத்தில் இருளர் பழங்குடி மக்களுக்கான பாக்குதட்டு அலகு திறப்பு விழா! அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

X
Rasipuram King 24x7 |29 Nov 2025 7:30 PM ISTராசிபுரம் அருகே ராஜபாளையம் கிராமத்தில் இருளர் பழங்குடி மக்களுக்கான பாக்குதட்டு அலகு திறப்பு விழா! அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
ராசிபுரம் அருகே ராஜபாளையம் கிராமத்தில், விடிவிகே - இருளர் பழங்குடி மக்களுக்கான பாக்குதட்டு அலகினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியம், ராஜபாளையம் கிராமத்தில் பழங்குடியினர் நலத்துறை தொல்குடி திட்டத்தின் கீழ், பாக்குதட்டு தயாரித்தல் அலகு துவக்க விழா, புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. விழாவில், மேக்னம் திட்ட இயக்குனர் ச.சத்தியதாஸ் சிறப்பு அழைப்பாளர்களை வரவேற்றார். இதில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி துர்கா மூர்த்தி, பலங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கேபி. ராமசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மலைவாழ் இருளர் மக்களின் வாழ் வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தேங்காய் உடைக்கும் இயத்திரங்கள் பயன்படுத்துவதற்கான புதிய கட்டிடத்திற்க்கான பூமி பூஜையை செய்துவைத்தனர். இதையடுத்து, பாக்குமட்டை தயாரிக்கும் இயந்திரம் கட்டிட திறப்பு விழாவும், நேரிடையாக மலைகளில் இருந்து மக்களுக்காக குறிஞ்சி இயற்கை தயாரிப்புகள் என்ற பெயரில் புதிய தயாரிப்பு பொருள்கள் வெளியிட்டு விழாவும் நடைபெற்றது. விடிவிகே - இருளர் பழங்குடி மக்களுக்கான பாக்குதட்டு அலகினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து, பார்வையிட்டனர். மேலும், குறிஞ்சி இயற்கை தயாரிப்புகளை சுவைத்து பார்த்தனர். இவ்விழாவில், மலைவாழ்மக்கள் துணை இயக்குனர், பழங்குடியினர நலத்துறை திட்ட அலுவலர் ப.ராமசாமி மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர்கள், மேக்னம் நிறுவன பணியாளர்கள் கலந்துகொண்டனர் நிகழ்வில் 150க்கும் மேற்ப்பட்ட இருளர் மலைவாழ்மக்கள் கலந்துகொண்டனர்.. அருகே இருளர் பழங்குடி மக்களுக்கான பாக்குதட்டு அலகு திறப்பு விழா! அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்!! ராசிபுரம் அருகே ராஜபாளையம் கிராமத்தில், விடிவிகே - இருளர் பழங்குடி மக்களுக்கான பாக்குதட்டு அலகினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியம், ராஜபாளையம் கிராமத்தில் பழங்குடியினர் நலத்துறை தொல்குடி திட்டத்தின் கீழ், பாக்குதட்டு தயாரித்தல் அலகு துவக்க விழா, புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. விழாவில், மேக்னம் திட்ட இயக்குனர் ச.சத்தியதாஸ் சிறப்பு அழைப்பாளர்களை வரவேற்றார். இதில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி துர்கா மூர்த்தி, பலங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கேபி. ராமசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மலைவாழ் இருளர் மக்களின் வாழ் வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தேங்காய் உடைக்கும் இயத்திரங்கள் பயன்படுத்துவதற்கான புதிய கட்டிடத்திற்க்கான பூமி பூஜையை செய்துவைத்தனர். இதையடுத்து, பாக்குமட்டை தயாரிக்கும் இயந்திரம் கட்டிட திறப்பு விழாவும், நேரிடையாக மலைகளில் இருந்து மக்களுக்காக குறிஞ்சி இயற்கை தயாரிப்புகள் என்ற பெயரில் புதிய தயாரிப்பு பொருள்கள் வெளியிட்டு விழாவும் நடைபெற்றது. விடிவிகே - இருளர் பழங்குடி மக்களுக்கான பாக்குதட்டு அலகினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து, பார்வையிட்டனர். மேலும், குறிஞ்சி இயற்கை தயாரிப்புகளை சுவைத்து பார்த்தனர். இவ்விழாவில், மலைவாழ்மக்கள் துணை இயக்குனர், பழங்குடியினர நலத்துறை திட்ட அலுவலர் ப.ராமசாமி மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர்கள், மேக்னம் நிறுவன பணியாளர்கள் கலந்துகொண்டனர் நிகழ்வில் 150க்கும் மேற்ப்பட்ட இருளர் மலைவாழ்மக்கள் கலந்துகொண்டனர்..
Next Story
