மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவில் டமகா கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜைகள் தொடக்கம்

குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள அருள்மிகு மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி யாகசாலை பூஜைகள் துவங்கியது.
குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள அருள்மிகு மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர், அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சமேத சௌந்தர்ராஜ பெருமாள், அருள்மிகு பஞ்சமுக மகாவீரா ஆஞ்சநேயர் திருக்கோவில் புனராவர்த்தன மகா கும்பாபிஷேக விழா நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் பவானி சங்கமேஸ்வரர் கோவில் காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தகுடங்கள் எடுத்து வரப்பட்டது. . நேற்று மாலை ஸ்ரீமத் பரமஹம்சேத் யாதி ஸ்ரீரங்கபராங்குச பரகால நம்பி ராமானுஜ ஜீயர் சுவாமிகளின் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. மாரியம்மன் கோவிலில் இருந்து முளைப்பாரி அழைத்து வருதல், முதல்கால யாகசாலை பூஜை நடந்தது. . இன்று இரண்டாம், மூன்றாம் கால யாகசாலை பூஜை, ஞானசம்பந்தம் தலைமையில் பட்டிமன்றம் நடைபெறவுள்ளது. டிச. 1 காலை 06:00 மணியளவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
Next Story