எஸ்டிபிஐ கட்சி பூத் கமிட்டி மாநாடு நடந்தது

X
Tenkasi King 24x7 |29 Nov 2025 9:10 PM ISTதென்காசி மாவட்ட எஸ்டிபிஐ பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் மாநாடு இன்று நடந்தது
தென்காசி மாவட்ட எஸ்டிபிஐ பூத்கமிட்டி மாநாடு இன்று நடைபெற்றது.மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் திவான் ஒலி தலைமை தாங்கினார்.மாவட்ட பொதுச்செயலாளர் செய்யது மஹ்மூத் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாபர்அலி உஸ்மானி, நெல்லை மண்டல தலைவர் சிக்கந்தர், மாவட்ட துணைத் தலைவர் முகம்மது நயினார், மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் ஷேக்முகம்மது ஒலி, மாவட்ட செயலாளர்கள் சீனா, சேனா, சர்தார், அப்துல்பாசித், நூர்முகம்மது, மாவட்ட பொருளாளர் யாசர்கான் M.C., மாவட்ட செயற்குழு உறுப்பினர் அஸ்கர்அலி,WIM மகளிரணி மாவட்ட தலைவி பரக்கத்நிஷா,மாவட்ட செயலாளர் சுலைகாள்,வேளாண் அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகம்மது காசிம், இணை ஒருங்கிணைப்பாளர் அன்சாரி, வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் முகம்மது கனி, மாவட்ட செயலாளர் தமீம் அன்சாரி,தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட தலைவர் ஹக்கீம், தென்காசி சட்டமன்ற தொகுதிதலைவர் பீர்முகம்மது, தொகுதி செயலாளர் செய்யதுஅலி பாதுஷா, கடையநல்லூர் தொகுதி தலைவர் ஹக்கீம்சேட், தொகுதி செயலாளர் ஷாஜித் அலி, ஆலங்குளம் தொகுதி தலைவர் விஸ்வா ஹாஜா, தொகுதி செயலாளர் அப்துல்அஜீஸ், சங்கரன்கோவில் தொகுதி தலைவர் முகம்மது நிசார், தொகுதி செயலாளர் ஜமீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர்கள் நிஜாம்முகைதீன், கரீம்,அஹமது நவவி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு பூத்கமிட்டி பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி மாநாட்டு பேரூரையாற்றினார். மாநாட்டில் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த சிறுவர், சிறுமியருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. மாநாட்டில் ஆண்கள், பெண்கள் என பூத்கமிட்டி பொறுப்பாளர்கள் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
Next Story
