ஆரணி அருகே குப்பை கழிவுகளை கொட்டி நீர் நிலைகளை சீரழிக்கும் ஆரணி நகராட்சி நிர்வாகம்
Arani King 24x7 |29 Nov 2025 9:25 PM ISTகுடியிருப்பு பகுதியில் குப்பைகளை கொட்டி வருவதால் துர்நாற்றம் வீசுவதுடன் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.
ஆரணி அருகே முள்ளிப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட ஹவுசிங்போர்டு பகுதியில் திருமலராயபுரம் ஏரி உள்ளது. இந்த ஏரி கடந்த 2019_20ம் ஆண்டு குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுற்றியுள்ள பகுதியில் நிலத்தடி நீர் உயர ஏரி பராமரிக்கப்பட்டது. இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் டவுன் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை திருமலராயபுரம் ஏரியில் கொட்டி வருவதால் மேலும் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன் குடியிருப்பு பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதாகவும் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்தவாறு சாமி தரிசனம் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக பகுதி மக்கள் குற்றச்சாட்டு விடுகின்றனர். ஆரணிஆரணி நகராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பைகளை கொட்டாமல் ஏரியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story



