வாசுதேவநல்லூர் அருகே மினி பஸ் மோதிய விபத்தில் இளைஞர் பலி

X
Tenkasi King 24x7 |29 Nov 2025 9:42 PM ISTவாசுதேவநல்லூர் அருகே மினி பஸ் மோதிய விபத்தில் இளைஞர் பலி
தென்காசி மாவட்டம் ,வாசுதேவநல்லூர் அருகே உள்ள வெள்ளானைக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பண்டார நாயக்கர் மகன் கோபால்சாமி (27) டைல்ஸ் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று மதியம் 12 மணியளவில் வாசுதேவநல்லூர் சட்டமன்ற அலுவலகம் அருகில் உள்ள டீக்கடையில் டீ வாங்கி தனது மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்த பொழுது எதிரே வந்த மினி பஸ் மோட்டார் சைக்கிளில் மோதியதால் தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அருகில் உள்ள தீயணைப்பு படை வீரர்கள் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின் மேல் மருத்துவத்திற்க்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த வாசுதேவநல்லூர் போலீசாரர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
