தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வெண்ணந்தூர் கிளையின் ஒன்றியத் தேர்தல்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வெண்ணந்தூர் கிளையின் ஒன்றியத் தேர்தல்...
X
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வெண்ணந்தூர் கிளையின் ஒன்றியத் தேர்தல்...
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வெண்ணந்தூர் கிளையின் ஒன்றியத் தேர்தல் வெள்ளைப் பிள்ளையார் கோவில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இதில் ஒன்றியத் தலைவராக திரு.இர.மனோகரன் அவர்களும்,ஒன்றியச் செயலாளராக திரு. இர.ஜெகந்நாதன் அவர்களும்,ஒன்றியத் துணைச் செயலாளராக திரு.சி.ஆர்.செல்வகுமார் மற்றும் திருமதி.பி.கோமதி அவர்களும், ஒன்றியப் பொருளாளராக திரு.அ.சுப்ரமணி அவர்களும், கொள்கை விளக்கச் செயலாளராக திரு.ம.சுரேஷ்குமார் அவர்களும்,ஒன்றியத் துணைத் தலைவர்களாக ஙதிரு.ந.வெங்கடாசலம் மற்றும் திருமதி.K.தெய்வானை அவர்களும், மூத்தோர் அணி அமைப்பாளராக திரு.ஆ.இராஜேந்திரன் அவர்களும், துணை அமைப்பாளராக திரு.இரா.சண்முகம் அவர்களும், மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர்களாக திரு.மா.கந்தசாமி, திரு.ப.கோவிந்தராஜ், திரு.ம.பிரபு ஆகியோரும், ஒன்றியச் செயற்குழு உறுப்பினர்களாக திரு.கா.இளங்கோ, திருமதி.K.மஞ்சுளா, திருமதி.த.கோமளா, திருமதி.A.ஜூலியட் ஜெனிபா, திருமதி.சு.சுமதி திருமதி.R.சந்திரா திருமதி.மு.இந்திராணி திருமதி.C.செல்வராணி ஆகியோரும், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக திரு.இரா.ஆனந்த் அவர்களும்,துணை அமைப்பாளராக திரு.R.பாண்டித்துரை அவர்களும்,தகவல் தொழில்நுட்ப அமைப்பாளராக திரு.செ.சுகுமார் அவர்களும், ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளராக திருமதி.A.D.ஜெயந்தி வர்களும்,ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளர் திரு.வெ.இராமச்சந்திரன் அவர்கள் புதிய பொறுப்பாளர்களை வரவேற்று வாழ்த்தி பாராட்டி, சங்கங்களின் நீண்ட நெடிய வரலாறு பற்றியும், சங்கங்களின் நெடுந்தூரப் பயணம் பற்றியும் சங்கத்தின் எதிர்காலம் பற்றியும் எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினார்கள். தேர்தல் ஆணையாளராக மல்லசமுத்திரம் ஒன்றிய செயலாளர் திரு.மு.ரவி அவர்கள் பங்கேற்று தேர்தலை நடத்தி வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களுக்குப் பதவிப் பிரமாண உறுதிமொழி செய்து வைத்தார். இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் திரு.இர.ஜெகந்நாதன் அவர்கள் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கு TET நுழைவுத் தேர்வை முழுமையாக ரத்து செய்ய கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும். எஸ் ஐ ஆர் படிவம் வாங்கும் பணியை ஆசிரியர்களுக்கு கொடுப்பது மாணவர்களின் கல்வி தரத்தை பாதிக்கிறது எனவே எஸ் ஐ ஆர் படிவம் வாங்குவதிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும். வெண்ணந்தூர் ஒன்றியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதி தொகையானது 10 வருட காலமாகியும் அத்தொகை எங்கு உள்ளது? என்று தெரியாத நிலையில் அதனை முறைப்படுத்தி அந்தந்த ஆசிரியர்களுடைய வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். தமிழகத்தில் சத்துணவு பணியாளர் மற்றும் சமையலர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் அரசாணை 243 முற்றாக இரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை வாசித்து சங்கங்களின் பரிணாம வளர்ச்சி பற்றி சிறப்புரை ஆற்றினார். இறுதியாக ஒன்றியப் பொருளாளர் அ.சுப்ரமணி, இர.ஜெகந்நாதன்,ஒன்றியச் செயலாளர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், வெண்ணந்தூர். அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.
Next Story