அரசு சார்பில் மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்தல் அமைச்சர் மா.மதிவேந்தன் பங்கேற்பு..

X
Rasipuram King 24x7 |30 Nov 2025 5:55 PM ISTஅரசு சார்பில் மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்தல் அமைச்சர் மா.மதிவேந்தன் பங்கேற்பு..
சட்டமன்ற அறிவிப்பு 2025-2026 அறிவிப்பு எண் 28 ன் படி திருக்கோயில் சார்பாக மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்தல் வகையில் இன்று 30.11.2025 நாமக்கல் மாவட்டம்,இராசிபுரம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலில் 70 வயது பூர்த்தி அடைந்த மூத்த தம்பதிகள் A நாராயணன்- N.கமலம், குருசாமி பாளையம், மற்றும் T.அருணாச்சலம் - A.புஷ்பா ராசிபுரம் அகிய மூத்த தம்பதியினருக்கு திருக்கோயில் சார்பாக சிறப்பு செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர், மருத்துவர் மா.மதிவேந்தன், கலந்து கொண்டு அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பித்தார். இதில் இராசிபுரம் சரக ஆய்வாளர் திருமதி சு.கீதாமணி, கைலாசநாதர் திருக்கோயில் செயல் அலுவலர் திருமதி.தெ.சவிதா, அறங்காவலர் குழு தலைவர் திரு.சக்திவேல் மற்றும் உறுப்பினர்கள், இராசிபுரம் மாரியம்மன் செல்லாண்டியம்மன் திருக்கோயில் செயல் அலுவலர் திரு.பா.நந்தகுமார், திருக்கோயில் அர்ச்சகர்கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மூத்த தம்பதியர்களை வாழ்த்தி அவர்களிடம் ஆசி பெற்றனர்.
Next Story
