சாலையை சீரமைக்க வேண்டி கொட்டும் மழையில் நாற்று நடும் போராட்டம்.
Perambalur King 24x7 |30 Nov 2025 8:17 PM IST30 ஆண்டுகளுக்கு மேலாக சாலையே இல்லாமல் வசித்து அவதி உற்று வருகின்றனர் தெருக்களில் சேரும் சகதியுமாக இருப்பதால் பள்ளி மாணவர்கள் முதல் சிறியவர் முதல் பெரியவர் வரை பெரும் அவதி
பெரம்பலூர் அருகே வேப்பூர் ராஜீவ் காந்தி நகரில் சாலையை சீரமைக்க வேண்டி கொட்டும் மழையில் நாற்று நடும் போராட்டம். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஓலைப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட வேப்பூர் ராஜீவ் காந்தி நகரில் சாலையை சீரமைக்க வேண்டி பொதுமக்கள் கொட்டும் மழையில் நாற்று நடும் போராட்டம் ஈடுபட்டனர். வேப்பூர் கிராமம் ராஜிவ்காந்தி நகர் பகுதியில் மட்டும் சுமார் 100 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தெருவில் மட்டும் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சாலையே இல்லாமல் வசித்து அவதி உற்று வருகின்றனர் தெருக்களில் சேரும் சகதியுமாக காணப்படுகிறது தெரு முழுவதும் மழை காலங்களில் புல் செடிகள் நாத்து நட்டது போல் காணப்படுகிறது கடந்த 30 வருடங்களாக மெட்டல் சாலை வசதி வேண்டி போராடி வருகின்றனர் பெண்கள், வயதானவர்கள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் என பலர் வசித்து வருகின்றனர் இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வந்த நிலையில் தெருவில் சாலை வசதி இல்லாமல் இருக்கும் நிலையில் பள்ளி குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல முடியாத அவல நிலையும் வயதானவர்கள் கீழே விழுந்தும் அவதிக்குள்ளாகிறனர் நடவடிக்கை எடுக்காத ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ந.25-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் தெருவில் உள்ள சேற்றில் கொட்டும் மழையில் நாற்று நாடும் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது
Next Story


